TET & TNPSC important Tamil Question Answer Part-1

1. ஒன்றேயென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் (யுத்தகாண்டம்)
2. வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் ( வான்மீகி )
3. கவிப் பேரரசர் (கம்பர்)
4. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் (இராமவதாரம்)
5. கம்பர் பிறந்த ஊர் (திருவழுந்தூர்)
6. கம்பர் வாழ்ந்த காலம் (கி.பி.12)
7. கம்பரை ஆதரித்த வள்ளல் (சடையப்ப வள்ளல்)
8. ‘கவிச்சக்கரவர்த்தி’ எனப் போற்றப்படுபவர் (கம்பர்)
9. மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள நூல் (தமிழரசி குறவஞ்சி)
10. தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
11. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் (சுவாமிமலை முருகன்)
12. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி (தமிழன்னை)
13. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
14. கற்றோரால் ‘புலவரேறு’ எனச் சிறப்பிக்கப் பட்டவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
15. வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நமசிவாய முதலியார் தலைமையில் ---------------- பரிசளிக்கப் பெற்றார் (தங்கத்தோடா)
16. வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார். (நமசிவாய முதலியார்)
17. யார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். (உமா மகேசுவரனார்)
18. நாட்டு வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (நாமக்கல் கவிஞர் பாடல்கள்)

19. நாட்டுவாழ்த்துப் பாடல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் --------------- பகுதியில் அமைந்துள்ளது. (தேசிய மலர்)
20. நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் (மோகனூர்)
21. நாமக்கல் கவிஞர் எக்கலையில் வல்லவர் (ஓவியக்கலை)
22. ‘கத்தியின்றி இரத்தமின்ம்றி’ என்னும் பாடலை இயற்றியவர் (நாமக்கல் கவிஞர்)
23. நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------- விருதளித்துச் சிறப்பித்தது (பத்மபூஷன்)
24. நாமக்கல் கவிஞருக்கு மாநில அரசு செய்த சிறப்பு (அரசவைக் கவிஞர், சட்ட மேலவை உறுப்பினர்)
25. முதலில் அரசவை கவிஞராக இருந்தவர் (நாமக்கல் கவிஞர்)
26. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
27. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு)
28. அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் (பரிபாடல்)
29. சங்க நூல்கள் பழந்தமிழ் இலக்கணமாகிய --------------- இலக்கியங்களாகத் திகழ்கின்றன. (தொல்காப்பியம்)
30. சங்கப் புலவர்கள் சிறப்பாகக் கையாண்டுள்ள உத்தி ----------- (உள்ளுறை உவமம், இறைச்சி)
31. உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவற்றை ------------- எனவும் அழைக்கலாம். (குறிப்புப் பொருள் உத்தி)
32. புறநானூற்றிற்கு வழங்கும் வேறு பெயர் (புறம், புறப்பாட்டு)
33. புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது (புறநானூறு)
34. புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
35. புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள் (11)
36. புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள் (65)
37. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் (புறநானூறு)
38. புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர் ------------ அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். (ஜி.யு.போப்)
39. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை (13 – 31)
40. அகநானூற்றைத் தொகுத்தவர் (உருத்திரசன்மர்)
41. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் (பாண்டியன் உக்கிரப்பெருவழுதி)
42. அகநானூற்றிற்கு வழங்கும் வேறுபெயர் (நெடுந்தொகை)
43. ‘அகம்’ என்ற பெயரில் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் (அகநானூறு)
44. அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகளின் எண்ணிக்கை (மூன்று)
45. அகநானூறு களிற்றியானைநிரையில் உள்ள பாடல்கள் (120)
46. அகநானூறு மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்கள் (180)
47. அகநானூறு நித்திக்கோவையில் உள்ள பாடல்கள் (100)
48. அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படை எண்களாக வருவன ---------- திணைப் பாடல்கள் (பாலை)
49. அகநானூற்றில் 2,8 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (குறிஞ்சி)
50. அகநானூற்றில் 4,14 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (முல்லை)
51. அகநானூற்றில் 6.16 என வரும் பாடல்கள் ----------- திணைப்பாடல்கள் (மருதம்)
52. அகநானூற்றில் 10, 20 என வரும் பாடல்கள் ------------ திணைப்பாடல்கள் (நெய்தல்)
53. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)
54. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை (9 – 12)
55. நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
56. நற்றிணையைத் தொகுப்பித்தவன் (பன்னாடு தந்த மாறன்வழுதி)
57. குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை (4-8)
58. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
59. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை (402)
60. கபிலர் பிறந்த ஊர் (திருவாதவூர்)
61. கபிலர் --------- மன்னனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். (பாரி)
62. கபிலரின் பாட்டுத் திறனுக்கு ----------என்னும் தொடரே சான்றாகும் (வாய்மொழிக் கபிலர்)
63. கபிலர் ------------- திணைப் பாடல்கள் பாடுவதி வல்லவர் (குறிஞ்சி)
64. கபிலரின் உயிர்த்தோழராக விளங்கிய கடையெழு வள்ளல்களுள் ஒருவர் (பாரி)
65. கபிலரை வாய்மொழிக் கபிலர் எனப் பாராட்டியவர் (நக்கீரர்)
66. கபிலரை ‘நல்லிசைக் கபிலர்’ எனப் பாராட்டியவர் (பெருங்குன்றூர்க் கிழார்)
67. கபிலரை ’வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ எனப் பாராட்டியவர் (பொருந்தில் இளங்கீரனார்)
68. கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’, ‘பொய்யா நாவிற் கபிலன்’ எனப் பாராட்டியவர் (மாறோக்கத்து நப்பசலையார்)
69. ஐங்குறுநூற்றுப் பாக்களின் அடிவரையறை (3-5)
70. ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (100)

71. ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை (500)
72. ஐங்குறுநூறு குறிஞ்சித் திணையைப் பாடியவர் (கபிலர்)
73. ஐங்குறுநூறு முல்லைத் திணையைப் பாடியவர் (பேயனார்)
74. ஐங்குறுநூறு மருதத் திணையைப் பாடியவர் (ஓரம்போகியார்)
75. ஐங்குறுநூறு நெய்தல் திணையைப் பாடியவர் (அம்மூவனார்)
76. ஐங்குறுநூறு பாலைத் திணையைப் பாடியவர் (ஓதலாந்தையார்)
77. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
78. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் (கூடலூர் கிழார்)
79. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை)
80. திருக்குறள் என்பதன் இலக்கணக் குறிப்பு (அடையடுத்த ஆகுபெயர்) 

கருத்துரையிடுக

0 கருத்துகள்