TNPSC & TET Important Tamil Questions Answers Part-2

  

81. குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)

82. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)

83. திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)

84. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் (25)

85. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் (9)

86. திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (4)

87. திருக்குறள் பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள் (3)

88. திருக்குறள் காமத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (2)

89. ’பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழியில் இரண்டு என்பது எதைக் குறிக்கிறது? (திருக்குறள்)

90. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது (திருவள்ளுவமாலை)

91. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாடியவர் (பாரதியார்)

92. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ எனப் பாடியவர் (பாரதிதாசன்)

93. திருக்குறளுக்கு முன்னர் உரையெழுதியோர் எண்ணிக்கை (பத்து)

94. திருக்குறளுக்கு ----------------- என்பார் எழுதிய உரையே சிறந்ததாக புகழப்படுகிறது. (பரிமேலழகர்)

95. முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர் (திருக்குறள்)

96. கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31)

97. ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது (சிலப்பதிகாரம்)

98. முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல் (சிலப்பதிகாரம்)

99. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)

100. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு (காதை)

101. சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை (30)

102. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (இளங்கோவடிகள்)

103. இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)

104. இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)

105. இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)

106. சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)

107. சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர் (அரும்பத உரைகாரர்)

108. சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர் (அடியார்க்குநல்லார்)

109. சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)

110. சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இவ்வாறு அழைப்பர் (இரட்டைக் காப்பியங்கள்)

111. மணிமேகலையை இயற்றியவர் (சீத்தலைச் சாத்தனார்)

112. யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்? (சீத்தலைச் சாத்தனார்)

113. ’நெஞ்சையள்ளும் சிலம்பு’ எனப் பாராட்டியவர் (பாரதியார்)

114. ”தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” எனப்பாராட்டியவர் (கவிமணி)

115. வரி என்பது ------------------ வகையது. (இசைப்பாடல்)

116. கண்ணகியின் தந்தை பெயர் (மாசாத்துவான்)

117. கோவலனின் தந்தை பெயர் (மாநாய்கன்)

118. மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)

119. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணின் பெயர் (மணிமேகலை)

120. கம்பராமாயணத்தை இயற்றியவர் (கம்பர்)

121. தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)

122. வடமொழியில் இராமாயணம் இயற்றியவர் (வான்மீகி)

123. ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல் (இராமாயணம்)

124. ’ஆதிகவி’ என்று அழைக்கப்படக் கூடியவர் (வான்மீகி)

125. கம்பநாடகம், கம்பசித்திரம் என அழைக்கப்படும் நூல் (கம்ப இராமாயணம்)

126. கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு (96)

127. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (ஆறு)

128. உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)

129. சுந்தரகாண்டம் இராமாயணத்தில் --------- ஆவது காண்டம் (ஐந்தாவது)

130. இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் (சுந்தரகாண்டம்)

131. சிறியதிருவடி என்று அழைக்கப்படக் கூடியவர் (அனுமன்)

132. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் (அனுமன்)

133. சீதையை அனுமன் கண்டது ---------- என்னும் இடத்தில் (அசோகவனம்)

134. ’தனயை’ என்னும் சொல்லின் பொருள் (மகள்)

135. இராமன் கொடுத்ததாக அனுமன் சீதையிடம் காட்டியது (கணையாழி)

136. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் (ஒரு திங்கள்)

137. வீரமாமுனிவரின் தாய்நாடு (இத்தாலி)

138. தேம்பாவணியை இயற்றியவர் (வீரமாமுனிவர்)

139. தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)

140. இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)

141. தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)

142. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)

143. கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)

144. வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)

145. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)

146. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி (சதுரகராதி)

147. பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் (பாரதிதாசன்)

148. பாரதிதாசனின் இயற்பெயர் (கனக சுப்புரத்தினம்)

149. பாரதிதாசன் ஆற்றிய பணி (ஆசிரியர் பணி)

150. தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர் (பாரதிதாசன்)

151. புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்)

152. ‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)

153. பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)

154. பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்)

155. “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)

156. பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்)

157. தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்)

158. பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் (நன்கு கட்டப்பட்டது)

159. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் (பாட்டியல் நூல்கள்)

160. பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் (சதுரகராதி)

கருத்துரையிடுக

0 கருத்துகள்