பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் உள்ள பகுபத உறுப்பிலக்கணம் அனைத்தும் ஒரே பக்கத்தில்
பகுபத உறுப்பிலக்கணம் இயல்-1, இயல்-2, இயல் -3, இயல் -4
இயல் -5
15. விளைவது - விளை + வ் + அ + து
விளை - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
அ - சாரியை
து - தொழிற்பெயர் விகுதி
16. சமைக்கின்றார் - சமை + க் + கின்று + ஆர்
சமை - பகுதி
க் - சந்தி
கின்று - நிகழ்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
17 .உரையாமை - உரை+ ய் + ஆ + மை
உரை - பகுதி
ய் - சந்தி ( உடம்படுமெய் )
ஆ - எதிர்கால இடைநிலை
மை - தொழிற்பெயர் விகுதி
18. காய்க்கும் - காய் + க் + க் + உம்
காய் - பகுதி
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை
உம் - பெயரெச்ச விகுதி
இயல் - 6
19. பருகிய - பருகு +இன் + ய் + அ
பருகு - பகுதி
இன் - இறந்தகால இடைநிலை - 'ன் ' கெட்டது விகாரம்
அ - பெயரெச்ச பகுதி
20 . பூக்கும் - பூ + க் + க் + உம்
பூ - பகுதி
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை
உம் - வினைமுற்று விகுதி
21. தொட்டு - தொடு( தொட்டு ) + உ
தொடு - பகுதி, ' தொட்டு ' என இரட்டித்து இறந்தகாலம் காட்டியது - விகாரம்
உ - வினையெச்ச விகுதி
22 . கண்டேன் - காண் + (கண் ) + ட் + ஏன்
காண் - பகுதி , ' கண் ' எனக் குறுகியது விகாரம்
ட் - இறந்தகால இடைநிலை
ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
இயல் - 7
23. இறைஞ்சி - இறைஞ்சு + இ
இறைஞ்சு - பகுதி
இ - வினையெச்ச விகுதி
24. ஓம்புவார் - ஓம்பு + வ் + ஆர்
ஓம்பு - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
25. கொண்ட - கொள் (ண்) + ட் +அ
கொள் - பகுதி ' ண் ' ஆனது விகாரம்
ட் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
26. ஆழ்ந்த - ஆழ் + த் ( ந் ) + த் + அ
ஆழ் - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
27. ஓங்கிய - ஓங்கு +இ (ன் )+ ய் + அ
ஓங்கு - பகுதி
இ(ன்) - இறந்தகால இடைநிலை
ய் - உடம்படுமெய்
அ - பெயரெச்ச விகுதி
28. மகிழ்ந்தோர் - மகிழ் +த்(ந்) +த் +ஓர்
மகிழ் - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி
இயல் - 8
29. வேண்டி - வேண்டு + இ
வேண்டு - பகுதி
இ - வினையெச்ச விகுதி
30. போகிறது - போ + கிறு + அ + து
போ - பகுதி
கிறு - நிகழ்கால இடைநிலை
அ - சாரியை
து - ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
31. மலர்ச்சி - மலர் + ச் + சி
மலர் - பகுதி
ச் - பெயர் இடைநிலை
சி - தொழிற்பெயர் விகுதி
32 . இணைகின்றன - இணை + கின்று + அன் + அ
இணை - பகுதி
கின்று - நிகழ்கால இடைநிலை
அன் - சாரியை
அ - பலவின்பால் வினைமுற்று விகுதி
33. போக்குக - போக்கு + க
போக்கு - பகுதி
க - வியங்கோள் வினைமுற்று விகுதி
இயல் - 9
34 . சரிந்து - சரி + த் ( ந் ) + த் + உ
சரி - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
35 . உடையார் - உடை + ய் + அர்
உடை - பகுதி
ய் - சந்தி ( உடம்படுமெய் )
அர் - பலர்பால் வினைமுற்று விகுதி
36. பொளிக்கும் - பொளி + க் +க் +உம்
பொளி - பகுதி
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை
உம் - வினைமுற்று விகுதி
0 கருத்துகள்