10TH TAMIL பலவுள் தெரிக.

1.1 அன்னை மொழியே

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
விடை: இ) எம் + தமிழ் + நா

1.2 தமிழ்சொல் வளம்

2. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
விடை:  ஈ) சருகும் சண்டும்

3. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
அ) குலை வகை
ஆ) மணி வகை
இ) கொழுந்து வகை
ஈ) இலை வகை
விடை: ஆ) மணி வகை

1.3 இரட்டுற மொழிதல்

4. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
விடை:   அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

கருத்துரையிடுக

1 கருத்துகள்