10th Tamil ilakkanam | Thogai Nilai Thodar

 

 10th Tamil - தொகைநிலைத் தொடர் 

(பண்புத்தொகை, உவமைத்தொகை,
உம்மைத்தொகை,  அன்மொழித்தொகை)

TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள்
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். 

3) பண்புத்தொகை
4) உவமைத்தொகை
5) உம்மைத்தொகை 
6) அன்மொழித்தொகை 

பண்புத்தொகை
நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் 'மை' என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

எ.கா. 
செங்காந்தள் 
(செம்மையாகிய காந்தள்) 

வட்டத்தொட்டி 
(வட்டமான தொட்டி) 

இன்மொழி 
(இனிமையானமொழி)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று டையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

எ.கா. 
மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு.
திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்குமுன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன. 
உவமைத்தொகை
உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா. 
மலர்க்கை (மலர் போன்ற கை)
மலர் உவமை, கை உவமேயம் (பொருள்) 
இடையே 'போன்ற' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. 

உம்மைத்தொகை
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும். 
உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
எ.கா. 
அண்ணன் தம்பி, 
தாய்சேய் 
அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.
அன்மொழித்தொகை
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.
எ.கா. 
சிவப்புச் சட்டை பேசினார்
முறுக்கு மீசை வந்தார்

சிவப்புச் சட்டை
அணிந்தவர் பேசினார், 
முறுக்கு மீசையை உடையவர் வந்தார் 
எனத் தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்