10th Tamil Book | விருந்து போற்றுதும்! - உரைநடை

 

 10th Tamil - விருந்து போற்றுதும்!

TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள்
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். 
‘விருந்தே புதுமை ’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

“…………………… தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”
                                   - சிலப்பதிகாரம், 16:72,73
கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்துவதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். 
"பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே"
                                     - கம்பராமாயணம், 1:2:36
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

"விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல"
                                             - கலிங்கத்துப்பரணி, 477
கலிங்கத்துப்பரணில் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்.

தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. 
அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பி்றருக்கும்
கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கி்றது என்பதை,
“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே....... ”
                                  - பு்றநானூறு, 182
என்று இ்ளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்.
நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உ்ணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு. இதை
“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்”
என்று நற்றிணை (142) குறிப்பிடுகி்து.
Click & Download Full Pdf
பழமொழிகளை நிறைவு செய்க.
உப்பில்லாப் …………………………
ஒரு பானைச் …………………………
உப்பிட்டவரை …………………………
விருந்தும் …………………………
அளவுக்கு …………………………

Answer:
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்