மலைபடுகடாம் | Malaipadukadam - Pathu Pattu


10th Tamil - மலைபடுகடாம்
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள்
நூல் வெளி
  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று 'மலைபடுகடாம்'. 
  • 583 அடிகளைக் கொண்டது. 
  • இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது.
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.
ஆற்றுப்படை
ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.

சொல்லும் பொருளும்
  1. அசைஇ - இளைப்பாறி
  2. கடும்பு - சுற்றம்
  3. ஆரி - அருமை
  4. வயிரியம் - கூத்தர்
  5. இறடி - தினை
  6. அல்கி - தங்கி
  7. நரலும் - ஒலிக்கும்
  8. படுகர் - பள்ளம் 
  9. வேவை - வெந்தது 
  10. பொம்மல் - சோறு
 
இலக்கணக் குறிப்பு
அசைஇ – சொல்லிசை அளபெடை
கெழீஇ – சொல்லிசை அளபெடை  
பரூஉக் - செய்யுளிசை அளபெடை
குரூஉக்கண்- செய்யுளிசை அளபெடை

பகுபத உறுப்பிலக்கணம்
மலைந்து - மலை + த்(ந்) + த் + உ
மலை - பகுதி
த் - சந்தி 'ந்' ஆனது விகாரம் 
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி

பொழிந்த - பொழி + த்(ந்) + த் + அ 
பொழி – பகுதி
த் - சந்தி 'ந்' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை 
அ - பெயரெச்ச விகுதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்