மு.மேத்தா TNPSC

மு. மேத்தா

• வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா (முகமது மேத்தா)

• புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.

• கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்.

• கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

• இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

• மு.மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

அவருடைய நூல்களுள் ஒன்றான “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.

இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

இவரின் கவிதைத் தொகுப்புகள்

  • கண்ணீர் பூக்கள்
  • ஊர்வலம்
  • திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  • இதயத்தில் நாற்காலி
  • வெளிச்சம் வெளியே இல்லை
  • மனச்சிறகு
  • அவர்கள் வருகிறார்கள்
  • காத்திருந்த காற்று
  • நந்தவன நாட்கள்
  • கம்பன் கவியரங்கத்தில்

புதுக்கவிதை :
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்