இந்திய தேசிய இயக்கம் | ஜாலியன் வாலாபாக் படுகொலை
- ரௌலட் சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பஞ்சாப்பில் பெரும் ஆதரவு கிடைத்தது.
- மக்கள் வன்முறையிலும் ஈடுபடுவார்கள் என நினைத்த பஞ்சாப் அரசு ஆட்சிப் பொறுப்பை ஜெனரல் டையர் என்பவர் தலைமையிலான இராணுவத்திடம் ஒப்படைத்தது.
- 1919 ஏப்ரல் 13 அன்று பைசாகி என்ற அறுவடைத் திருநாளைத் கொண்டாட மக்கள் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் திரண்டனர்.
- முன் அறிவிப்பு இன்றி அங்குப் படையுடன் சென்ற ஜெனரல் டையர் 10-15 நிமிடம் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
- இதில் 379 பேர் கொல்லப்பட்டனர் 137 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரவீந்திரநாத் தாகூர் தனது "நைட்” பட்டத்தைத் துறந்தார்.
- இக்கொலை விடுதலை இயக்கத்திற்கு உத்வேகம் தந்தது.
0 கருத்துகள்