இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

1) இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - இராஜாராம்மோகன்ராய்
2) இராஜாராம்மோகன்ராய் கற்ற மொழிகள் - அராபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு 3) இராஜாராம்மோகன்ராய் எழுதிய நூல்கள் - ஏசு கிறித்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
4) இராஜாராம்மோகன்ராய்க்கு ராஜா என்ற பட்டத்தை கொடுத்தவர் - 2ம் அக்பர்
5) நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம்மோகன்ராய்
6) 1815ல் ஆத்மிய சபாவை ஏற்படுத்தியவர் - இராஜாராம்மோகன்ராய்
7) பிரம்ம சமாஜம் - 1828

8) ஒரே கடவுள் கொள்கையை பிரம்மசமாஜம் வலியுறுத்தியது.
9) விதவைகள் மறுமணம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலப்புத்திருமணம் ஆகியவற்றை ஆதரித்தார்.
10) சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் கொண்டு வந்தவர் - வில்லியம் பெண்டிங் பிரபு
11) 1872ல் கேசவ் சந்திரசென் முயற்சியால் பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை
தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் கலப்புத்திருமணத்தையும் விதவைகள் மறுமணத்தையும் ஆதரித்தது.
12) பிரார்த்தனா சமாஜத்தை மும்பையில் ஏற்படுத்தியவர் - ஆத்மராம் பாண்டுரங் (1867)
13) பிரார்த்தனை சமாஜத்தின் பணிகள் - சமுதாய சீர்திருத்தங்களான சமபந்தி உணவு, கலப்புத்திருமணம், விதவைகள்
மறுமணம், பெண்கள் நலனை மேம்படுத்துதல், பின்தங்கிய மக்கள் நலனை உயர்த்துதல், பர்தா அணியும் முறையை
ஒழித்தல் மற்றும் குழந்தைகள் திருமணம் ஒழிப்பு

14) தயானந்த சரஸ்வதி பிறந்த இடம் - முர்வி, குஜராத், கத்தியவார் மாகாணம்
15) தயானந்தரின் இயற்பெயர் - மூல்சங்கர்
16) தயானந்தரின் குரு - சுவாமி விராஜனந்தர்
17) வேதங்களை நோக்கிச் செல் என்பது தயானந்தரின் புகழ்மிக்க பொன்மொழி
18) சுத்தி இயக்கம் - மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக சுத்தி இயக்கம் என்ற
இயக்கத்தைத் தொடங்கினார்
19) தயானந்தரின் சீடர்கள் - லாலாலஜபதிராய், லாலா உறன்ஸ்ராஜ், பண்டித குருதத்
20) சுதேசி, இந்தியா இந்தியருக்கே என்ற முழக்கங்களை முதன்முதலில் முழங்கியவர் - தயானந்த சரஸ்வதி
21) இந்து சமயத்தின் மார்டின்லூதர் என அழைக்கப்படுபபர் - தயானந்த சரஸ்வதி
22) ஆரிய சமாஜம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1875
23) பிரம்மஞான சபை - 1875, மேடம் பிளவாட்ஸ்கி மற்றும் ஆல்காட், நியூயார்க்
24) தியோஸ் என்பது கடவுள், சோபாஸ் அறிவு
25) பிரம்மஞான சபையின் தலைவராக அன்னிபெசன்ட் பொறுப்பேற்ற ஆண்டு - 1893
26) மத்திய இந்து கல்லூரியை ஆரம்பித்தவர் - அன்னிபெசன்ட்
27) மெய்ஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னிபெசன்ட் ஆரம்பித்த இதழ் - நியூ இந்தியா
28) தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர் - அன்னிபெசன்ட்
29) இந்தியர்களின் மறுமலர்ச்சிக்காக செயல்பட்ட இயக்கம் - தன்னாட்சி இயக்கம்
30) அடையாறில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கினார்
31) அடையாறில் ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சமஸ்கிருத நூல்களை பாதுகாத்து வந்தவர் - அன்னிபெசன்ட்
32) இராமகிருஷ்ண இயக்கத்தை ஆரம்பித்தவர் - விவேகானந்தர், 1897, பேலூர்
33) இராமகிருஷ்ணரின் துணைவியார் - சாரதாமணிதேவி
34) மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் பணி என்று கூறியவர் - இராமகிருஷ்ணர்
35) விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரநாத் தத்தா
36) சிகாகோ மாநாடு 1893
37) துறத்தல் மற்றும் சேவை இரண்டுமே நவீன இந்தியாவின் இருகொள்கைகளாக இருக்கவேண்டும் என்று கூறினார்
38) மக்கள் பணியே கடவுள் பணி - விவேகானந்தர்
39) இராமகிருஷ்ண இயக்கம் மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனப்பகுதியில் சூரிய ஒளியைப்பயன்படுத்தி மின்சாரம்
உற்பத்தி செய்யும் திட்டம் தோன்றுவதற்கு முக்கியப்பங்கு வகித்தது.
40) சமரச சுத்த சன்மார்க்க சங்கம் - வள்ளலார் இராமலிங்க அடிகள்
41) வள்ளலார் பிறந்த ஊர் - மருதூர்
42) (1870ல்)சத்திய ஞான சபை உள்ள இடம் - வடலூர்
43) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை - வள்ளலார்
44) மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி - வள்ளலார்
45) வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் - வள்ளலார், ஜீவகாருண்யம் (உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்)
46) அலிகார் இயக்கம் - சர் சையது அகமது கான்
47) அறிவியல் கழகத்தை ஏற்படுத்தியவர் - சர் சையது அகமதுகான்
48) முகமதியன் ஆங்கில ஓரியண்டல் கல்லூரி 1875ல் சர்சையது அகமது கான் ஆரம்பித்தார்
49) சர்சையது அகமது கான் நடத்திய பத்திரிக்கை - தாசில் உத் அத்லாக்
50) இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இருகண்கள் என்று கூறியவர் - சர்சையது அகமது கான்
51) முஸ்லீம்களின் முதல் சமய இயக்கம் - அலிகார் இயக்கம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்