அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌


அலிகார்‌ இயக்கம்‌ என்கிற சீர்திருத்த இயக்கம்‌ சர்‌ சையது அகமதுகான்‌ என்ற ஆங்கில அரசாங்கத்தில்‌ பணியாற்றிய நீதித்துறை அலுவலரால்‌ தோற்றுவிக்கப்பட்டது.

1864ஆம்‌ ஆண்டு காசிப்பூர்‌ என்னும்‌ இடத்தில்‌ சையது அகமதுகான்‌ பள்ளி ஒன்றை நிறுவினார்‌. பின்னர்‌ இது அறிவியல்‌ கழகம்‌ என்றழைக்கப்பட்டது.

1875ல்‌ அலிகாரில்‌ இவரால்‌ தோற்றுவிக்கப்பட்ட முகமதியன்‌ ஓரியண்டல்‌ கல்லூரி பிற்காலத்தில்‌ அலிகார்‌ முஸ்லீம்‌ பல்கலைக்கழகமாக வளர்ச்சியடைந்தது.

முஸ்லீம்களிடையே தன்னுடைய சீர்திருத்த கொள்கைகளை பரப்புவதற்காக தாசில்‌-உத்‌-அஃலக்‌ என்ற தினசரி பத்திரிகையை நடத்தினார்‌.

இந்துக்களும்‌ முஸ்லீம்களும்‌ இந்தியா என்ற பறவையின்‌ இரு கண்கள்‌ எனக்‌ கூறினார்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்