திட்டக்குழு | Planning Commission India

Planning Commission India  | திட்டக்குழு

  • திட்டக்குழு ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். (அரசியல் அமைப்பு சாராதது)
  • இது மத்திய அமைச்சரவை மூலம் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சாராத அமைப்பாகும்.
  • 1950 மார்ச் 15-ஆம் நாள் திட்ட குழு உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவின் எதிர்கால குறிக்கோள்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்கும்.
  • திட்டக் குழுவின் முதல் தலைவர் ஜவர்ஹலால் நேரு.
  • திட்டக் குழுவின் முதல் துணைத் தலைவர் குல்சாரிலால் நந்தா.
  • திட்டக்குழுவின் தலைவர் பிரதமர் ஆவார்.
  • துணைத் தலைவர் ஒருவரும் நியமிக்கப்படுவார், இவரே குழுவின் உண்மையான நிர்வாக தலைவர் ஆவார்.
  • அவரே ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்குவதற்கும், அவற்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு உரிமை உடையவர் ஆவார்.
  • நாட்டின் வளங்களை மதிப்பீடு செய்தல், திட்டங்களை உருவாக்குதல் திட்டங்களை முன்னுரிமைக்கேற்ப வளங்களைப் பகிர்ந்து அளிப்பது ஆகியவை திட்டக் குழுவின் முக்கிய பணிகளாகும்.
  • திட்ட அமைச்சரும் நிதி அமைச்சரும் இதன் உறுப்பினர்கள் அவர்கள். மற்ற அமைச்சர்களுடன் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்படுவார்கள்.
  • திட்டக்குழுவின் கடைசி தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா.
  • திட்டக்குழு 2014ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
  • திட்டக்குழுவிற்கு மாற்றாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டுள்ளது.
  • நிதி ஆயோக் குழுவின் முதல் தலைவர் நரேந்திர மோடி
  • நிதி ஆயோக் குழுவின் முதல் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா

திட்டக்கமிஷன் VS நிதி ஆயோக்
நிதி ஆயோக் பற்றி விளக்கமாக அறிய
ஐந்தாண்டு திட்டங்களும் திட்டமிடுதலும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்