19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
- ‘ஆரிய சமாஜம்’ - சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் கி.பி.1875ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
- இவர் ‘குஜராத்’ மாநிலத்தில் ‘கத்தியவார்’ மாகாணத்தில் ‘மூங்கிர்’ என்னுமிடத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.
- இயற்பெயர் ‘‘மூல் சங்கர்’’ .
- இவர் சுவாமி விராஜனந்தரின் சீடர் ஆவார்.
- ‘வேதங்களை நோக்கிச் செல்’ என்பதே இவரின் குறிக்கோளாகும்.
- மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக ‘சுத்தி இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
- ஆரிய சமாஜம் குழந்தை மணம், பலதார மணமுறை, பர்தா அணியும் முறை, சாதி மற்றும் உடன்கட்டை ஏறும் வழக்கம் போன்றவற்றை எதிர்த்தது.
- ஆங்கில வழிக் கல்வியைப் பயிற்றுவிக்க ‘தயானந்தா ஆங்கிலோ வேதிக் பள்ளிகள் (DAV - Dayanand Anglo Vedic Schools) மற்றும் கல்லூரிகளை நிறுவினார்.
- தயானந்தரின் சீடர்கள் - லாலா லஜ்பதிராய், லாலா ஹன்ஸ் ராஜ் மற்றும் பண்டித குருதத்.
- ‘சுதேசி‘ மற்றும் ‘இந்தியா இந்தியருக்கே’ போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர் ‘சுவாமி தயானந்தர்’ ஆவார்.
- சுவாமி தயானந்த சரஸ்வதியை இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என்பர்.
வரலாற்று நினைவுச் சின்னங்கள் | இந்திய வரலாறு
0 கருத்துகள்