தலைக்கோட்டைப் போரும் விஜயநகர் பேரரசின் வீழ்ச்சியும்

இந்தியாவின் வரலாறும் பண்பாடும் |
விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்

  • கிருஷ்ணதேவராயரைத் தொடர்ந்து அவருடைய இளைய சகோதரர் அச்சுதராயர் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

  • அச்சுதராயர் ஆட்சிக் காலத்திலும் இவருக்குப் பின்னர் அரியணை ஏறிய முதலாம் வேங்கடர் காலத்திலும் முக்கிய நிகழ்வுகள் எதுவும் இடம் பெறவில்லை .
  • இவர்களுக்குப் பின்னர் குறைந்த வயதைக்கொண்ட சதாசிவராயர் முடிசூட்டப்பட்டார். பகர ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த ராமராயர் பேரரசின் திறமை மிக்கத் தளபதியாவார்.

  • சதாசிவராயருக்கு அரசு பதவி ஏற்கும் வயது வந்த பின்னரும்கூட அவரைப் பெயரளவிற்கு அரசராக வைத்துக் கொண்டு ராமராயரே உண்மையான அரசராக ஆட்சி புரிந்தார்.

  • இச்சமயத்தில் விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர்.

  • எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565இல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர்கொண்டன.

  • ராக்சச தங்கடி (தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது.

  • இறுதியாக, விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.

  • கிழக்குக் கர்நாடகத்தில், துங்கபத்ரா நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது 'ஹம்பி' என அழைக்கப்படுகிறது.

  • ஹம்பி சீர்குலைந்து இடிபாடுகளாகக் காணப்படுகிறது. யுனெஸ்கோ ஹம்பியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்  (தொடர்ச்சி)
கிருஷ்ணதேவராயர்

விஜயநகர பேரரசின் இலக்கியம், கலை, கட்டடக்கலை

இந்தியாவின் வரலாறும் பண்பாடும் | விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்  

7th History | வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்