7th History | வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

  • ராஜபுதனம் என்பது ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பால் ஆனது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது சித்தூர் ஆகும். 
  • அனைத்து ராஜபுத்திர இனக்குழுவினரும் ஒருங்கிணையும் மையமாகச் சித்தூர் விளங்கிற்று.
  • மாளவம், குஜராத் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் சித்தூர் சிறியதே. இருந்தபோதிலும் ராஜபுத்திரர்கள் இந்த மூன்று அரசுகளிலும் ஆட்சி செய்தனர்.
  • சித்தூரின் ராணா (அரசர்) மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக ‘ஜெய ஸ்தம்பா’ எனும் வெற்றித்தூண் சித்தூரில் நிறுவப்பட்டது.
  • பிரதிகாரர்கள் மேற்கிந்தியப் பகுதியிலும், பாலர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் வலிமை மிக்க அரசுகளை நிறுவியிருந்தனர்.
ராஜபுத்திரர்களின் தோற்றம் 
  • ‘ராஜபுத்’ எனும் சொல் ‘ரஜ்புத்ர’ எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் அரசவம்ச ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல் என்பதாகும்.
  • ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் பந்தேல்கண்டின் சந்தேலர்கள் ஆவர்.
  • ஜேம்ஸ் டாட் எனும் கீழ்த்திசைப் புலமையாளர் கி.பி.(பொ.ஆ)1829இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் நான்கு குலங்கள் சிறப்புத்தகுதி பெற்றவையாகும். அவர்கள் பிரதிகாரர்கள், செளகான்கள், சோலங்கிகள் என்றழைக்கப்பட்ட சாளுக்கியர்கள் (தக்காணச் சாளுக்கியரிடமிருந்து வேறுபட்டவர்கள்), பவாரைச் சேர்ந்த பரமாரர்கள்
  • எனப்படுவோராவர்.
பிரதிகாரர்கள்
  • நான்கு முக்கிய குலமரபுகளைச் சார்ந்த ராஜபுத்திரர்களில் ஒரு பிரிவினரான பிரதிகாரர் அல்லது கூர்ஜரப் பிரதிகாரர் கூர்ஜராட்டிராவிலிருந்து (ஜோத்பூரில் உள்ளது) ஆட்சி புரிந்தனர்.
  • கி.பி.ஆறாம் நூற்றாண்டில் ஹரிச்சந்திரா என்பவர் கூர்ஜர அரச வம்சத்தின் அடிக்கல்லை நாட்டினார். பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் முதலாம் நாகபட்டர் என்பவராவார்.
விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்  (தொடர்ச்சி)
கிருஷ்ணதேவராயர்

தலைக்கோட்டைப் போரும் விஜயநகர் பேரரசின் வீழ்ச்சியும்

விஜயநகர பேரரசின் இலக்கியம், கலை, கட்டடக்கலை

இந்தியாவின் வரலாறும் பண்பாடும் | விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்