கிருஷ்ணதேவராயர் கலை, இலக்கியத்தை ஆதரித்தார்.
அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்தனர். அவர்களுள் மகத்தானவர் அல்லசானி பெத்தண்ணா ஆவார். மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஆளுமை தெனாலி ராமகிருஷ்ணன் (தெனாலிராமன்) ஆவார்.
விஜயநகர அரசர்களின் ஆதரவினால் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் சமயம் மற்றும், சமயம் சாரா நூல்கள் எழுதப்பட்டன. கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தைத் தெலுங்கு மொழியில் இயற்றினார். சமஸ்கிருத மொழியில் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலையும் எழுதினார்.
பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலைத் தெனாலி ராமகிருஷ்ணா எழுதினார்.
ஸ்ரீநாதர், பெத்தண்ணா, ஜக்கம்மா, துக்கண்ணா போன்ற புலவர்கள் சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைத் தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
விஜயநகர அரசர்களின் கோவில் கட்டுமான நடவடிக்கைககள் ஒரு புதிய பாணியை உருவாக்கின. அது விஜயநகரப்பாணி என அழைக்கப்பட்டது.
பெரும் எண்ணிக்கையிலான வடிவத்தில் பெரிய தூண்களும் அவற்றில் இடம்பெற்றுள்ள சிற்ப, செதுக்கல் வேலைப்பாடுகளும் விஜயநகரப்பாணியின் தனித்துவ அடையாளங்களாகத் திகழ்ந்தன.
இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகளில் குதிரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
மேலும் சிறப்பு நிகழ்வுகளின்போது கடவுளர்களைக் காட்சிப்படுத்துவதற்காக உயர்ந்த மேடையுடன் கூடிய மண்டபங்கள் அல்லது திறந்தவெளி அரங்குகள் கட்டப்பட்டன. இக்கோவில்களில் விரிவான அளவில் அழகிய செதுக்கல் வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களைக் கொண்ட கல்யாண மண்டபங்களும் காணப்படுகின்றன .
கிருஷ்ணதேவராயர்
தலைக்கோட்டைப் போரும் விஜயநகர் பேரரசின் வீழ்ச்சியும்
இந்தியாவின் வரலாறும் பண்பாடும் | விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்
7th History | வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
0 கருத்துகள்