விடைக்கேற்ற வினா அமைக்க.

விடைகேற்ற வினா அமைப்பது எப்படி?
விடைக்கேற்ற வினாவை தேர்வு செய்க.

1) கம்பர் எழுதிய நூல்கள் சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன.
கம்பர் எழுதிய நூல்கள்  எவை?

2) சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்குவர்.
இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படும் நூல் எவை?

3) “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழி பெயர்ப்பு” என்கிறார் மணவை முஸ்தபா.
மொழிபெயர்ப்பு பற்றி மணவை முஸ்தபா கருத்து யாது?
“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழி பெயர்ப்பு” என்று கூறுபவர் யார்? 

4) இறைவனுக்கு உகந்த கலையாகப் பரதநாட்டியம் கருதப்படுகிறது.
இறைவனுக்கு உகந்த கலையாகக் கருதப்படும் கலை எது?

5) கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர் காலக்கணிதம் ஆகும்.
கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற பகுதியின் பெயர் என்ன?

6) நூலின் பயன் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும்.
நூலின் பயன் யாது?

7) இயல், இசை, நாடகம் ஆகியன முத்தமிழ் எனப்படும்.
முத்தமிழ் எனப்படுவது யாது?

8) 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் எப்போது இணைந்தது?

9) ம.பொ.சி. அம்மானைப் பாடல்களை அடிக்கடி பாடிப்பாடி பிள்ளைப் பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.
ம.பொ.சி. எதை அடிக்கடி பாடிப்பாடி பிள்ளைப் பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்?

10) நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்.
நெய்தல் நிலத்தவர் யாரை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்?

 

8th Tamil Text Book கலைச்சொற்கள்

9th Tamil Text Book கலைச்சொற்கள்

10th Tamil Text Book கலைச்சொற்கள்

அடைமொழியால் குறிக்கப்படும்சான்றோர்கள்

மூவகைப் போலிகள்

கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்

புதுக் கவிதை - ஈரோடு தமிழன்பன்

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை

6th to 10th Tamil Text books | Tamil ilakkanam

கருத்துரையிடுக

0 கருத்துகள்