சமய முன்னோடிகள் - அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

 திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்


  • தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.
  • சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.
  • சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

1,2,3ம் திருமுறைகள் -திருஞான சம்பந்தர் - தேவராம்.

4,5,6ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவாரம்.

7ம் திருமுறை - சுந்தரர் -தேவாரம்.

8ம் திருமுறை - மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார்.

9ம் திருமுறை - திருமாளிகைத் தேவர் உட்பட்ட 9 நபர்கள்

10ம் திருமுறை - திருமலர் - திருமந்திரம்.

11ம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் உட்பட்ட 12 நபர்கள்.

12ம் திருமுறை - சேக்கிழார் - பெரிய புராணம்.

  • திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாணடார் நம்பி. 
  • நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே.
  • நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது பெரிய புராணம்.
  • முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். 

  • திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்.
  • திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.
  • குரவர் என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்.
  • சைவர்களின் தமிழ் வேதம் பன்னிரு திருமுறைகள்.

திருஞானசம்பந்தர்

  • இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. சமயக் குரவர் நால்வரின் முதலாவதாக்க குறிப்பிடப்படுபவர்.
  • தேவாரத்தின் முதல் நூலைப்பாடியவர். 23 பண்களில் (இசைகளில்) திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
  • திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.
  • திருமறைக்காடு (வேதாரண்யம்) கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.
  • கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்கியவர் திருஞானசம்பந்தர்.
  • திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் திருஏடகம்.
  • திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.
  • பால் குடித்தபோது பாடியது முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் பாடல்.
  • கதவு திறக்கப் பாடிய பாடல் இரக்கம் ஒன்றிலிர் என்று தொடங்கும் பாடல்.
  • மன்னனின் நோய் தீர்க்கப் பாடிய பாடல் மந்திரமாவது நீறு என தொடங்கும் பாடல்.
  • காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பதும் இவர் இயற்றிய பாடலே.
  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தரைப் புகழ்ந்தவர் சுந்தரர்.

சமய முன்னோடிகள் - சுந்தரர், மாணிக்கவாசகர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்