சுந்தரர்
- கைலாயத்தில் இவருக்கு ஆலால சுந்தரனார் என்று பெயர்.
- சுந்தரர் பிறந்த ஊர் திருநாவலூர்.
- வன் தொண்டர், தம்பிரான் தோழர் ஆகிய வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.
- இறைவனையே மனைவியிடம் தூது அனுப்பியதால் வன்தொண்டர் எனப்பட்டார்.
- சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் திருவெண்ணெய் நல்லூர்.
- பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா - சுந்தரர்.
மாணிக்கவாசகர்
- மாணிக்கவாசகர் இயற்பெயர் தெரியவில்லை. எனினும் சிலர் திருவாதவூரார் என்கின்றனர்.
- திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றி உள்ளார்.
- மாணிக்கவாசகர் பொருட்டே இறைவன் நரியைப் பரியாக்கினார். இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.
- பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார் என்பது மரபு.
- மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படுகிறது.
- நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்.
- ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி - மாணிக்கவாசகர்
- தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - மாணிக்கவாசகர்.
- வானாகி மண்ணாகி, ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்
- அம்மையே அப்பா ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்
- திருவாசகத்திற்கு உருகாதர் ஒரு வாசகத்திற்கும் உருகார் - பழமொழி.
- சைவவேதம் எனப்படுவது திருவாசகம்.
0 கருத்துகள்