ஆகுபெயர் - தமிழ் இலக்கணம்


இந்தியா மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றிபெற்றது.

இந்தியா ஆசியாக் கண்டத்தில் உள்ளது. இந்த இரு தொடர்களையும் படித்துப் பாருங்கள்.
முதல் தொடர் ‘இந்தியா’, மட்டைப்பந்து வீரர்களைக் குறிக்கிறது. இரண்டாம் தொடர் இந்தியா’, இடத்தைக் குறிக்கிறது.

ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ளது. இவ்வாறு வருவதற்கு ஆகுபெயர் என்பது பெயர்.

ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.


1.  பொருளாகுபெயர்:
‘மல்லிகை சூடினாள்’
அங்கு மல்லிகை என்பது கொடியாகிய முதற்பொருளைக் குறிக்காமல் பூ என்னும் சினையைக் குறிக்கிறது. இவ்வாறு முதற்பொருள் சினைக்கு (உறுப்புக்கு) ஆகி வருவது, முதலாகு பெயர் எனப்படும்.
இதனைப் பொருளாகுபெயர் எனவும் கூறுவர்.

2.  இடவாகு பெயர்:
இந்தியா மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றிபெற்றது.

3.  காலவாகுபெயர்:
திசம்பர் சூடினாள்
திசம்பர் என்னும் மாதப்பெயர், அம்மாதத்தில் பூக்கும் பூவிற்கு ஆகி வந்தது. அதனால், இது காலவாகுபெயர்
4.  சினையாகு பெயர்
சினை என்றால் உறுப்பு.
வெற்றிலை நட்டான்.
இத்தொடரில் உள்ள வெற்றிலை என்பது சினையாகிய இலையைக் குறிக்காமல், அதன் முதல் பொருளாகிய கொடிக்கு ஆகி வந்தது. அதனால், இது சினையாகு பெயர் ஆயிற்று.

5.  பண்பாகு பெயர்
பொங்கலுக்கு முன் வீட்டுச் சுவர்களுக்கு ‘வெள்ளை’ அடிப்போம்.
வெள்ளை என்பது நிறப்பண்பு. ஆனால், அது நிறத்தைக் குறிக்காமல், சுண்ணாம்பைக் குறித்து வந்தது. அதனால், இது பண்பாகு பெயர். இதனைக் குணவாகுபெயர் எனவும் கூறுவர்.

6.  தொழிலாகு பெயர்
‘பொங்கல்’ உண்டான்
இங்குப் பொங்கல் என்பது பொங்குதலாகிய தொழிற்பெயர். இத்தொழிற் பெயர் தொழிலைக் குறிக்காமல், அத்தொழிலால் ஆகும் உணவைக் குறித்தது. அதனால், இது தொழிலாகு பெயர்.
அளவைக் குறிக்கும் பெயர்களை அளவைப் பெயர்கள் என்பர்.

Current Affairs pdf free download 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf
Akash IAS Academy Study Materials
Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) [Total 154 Pages & 1600 Questions]

கருத்துரையிடுக

0 கருத்துகள்