முதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)

நம்மாழ்வார் பாடியது திருவாய்மொழி
பெரியாழ்வார் பாடியது திருமொழி
ஆண்டாள் பாடியது திருமொழி
திருமங்கையாழ்வார் பாடியது பெரிய திருமொழி
குலசேகராழ்வார் பாடியது பெருமாள் திருமொழி
திருமாலின் ஐம்படைகள் (ஐம்படைத்தாலி)


1. சக்கரம்  - சுதர்சனம் என்று பெயர்
2. வில் - சாரங்கம்  என்று பெயர்
3. வாள் - நந்தகம்  என்று பெயர்
4. தண்டு - கௌமோதகி  என்று பெயர்
5. சங்கு - பாஞ்ச சன்னியம்  என்று பெயர்

திருமாலின் வாகனம் - கருடன்
தொண்டன் - அனுமான்
திருமரு - ஸ்ரீவத்ஸம்
மணி -கௌத்துவம்

திருமாலைப் பாடாமல் நம்மாழ்வரையே தெய்வமாகப் பாடியவர் மதுரகவியாழ்வார்

பெண்ணாகிய  ஆண்டாளையும்  திருமாலை  பாடாத  மதுரகவியாழ்வாரையும்  நீக்கி  ஆழ்வார் மொத்தம் 10 பேர் என்று கூறுவாரும் உண்டு.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுவர்

சைவ  சமயத்தின்  ஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர்,  சுந்தரர்  என்ற  மூவரும்  மூவர்  முதலிகள் எனப்படுவர்.

1. பொய்கையாழ்வார்

ஊர் : காஞ்சிபுரம்
சங்கின் அம்சமாகப் பிறந்தவர்
பாடியது முதலாம் திருவந்தாதி
முதலாம் திருவந்தாதியில் 100 வெண்பாக்கள் உள்ளன
முதல் முதலாக திருமாலின் 10 அவதாரங்களைப் பாடியவர்

மேற்கோள்

"வையம் தகளியா, வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான்அடிகட்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குவே என்று"

"சென்றால் கடையாம், இருந்தால் சிங்காதனமாம்
நின்றால் மர அடியாம், நீள்கடலுள் - என்றும்
புனையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு".

2. பூதத்தாழ்வார்

ஊர் : மகாபலிபுரம்
கதாயுதத்தின் அம்சமாகப் பிறந்தவர்
பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் ஆழ்வார்.
இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இதில் 100 வெண்பாக்கள் உள்ளன.

மேற்கோள்

"மாதவன்மேல் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு"
"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்"

3.பேயாழ்வார்

ஊர் : மயிலாப்பூர்
வாளின் அம்சமாகப் பிறந்தவர்
பாடியது மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதியில் 100 வெண்பாக்கள் உள்ளன.

மேற்கோள்

"பொருப்பிடையே நின்றும் புனல் குதித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா"

"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று"

முதலாழ்வார்கள் மூவரும் சந்தித்துக் கொண்ட இடம் - திருக்கோவிலூர்

முதலாழ்வார்கள் மூவரும் திருமழிசையாழ்வாரைச் சந்தித்த இடம் - திருவல்லிக்கேணி.

சூரியனை விளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்

ஞானத்தை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்

பருப்பொருளைவிளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்

நுண்பொருளை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்

பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றிய விளக்கில் இறைவனைக் கண்டவர் - பேயாழ்வார்

தாமரையில் அவதரித்தவர் - பொய்கையாழ்வார்

குருக்கத்தியில் அவதரித்தவர் - பூதத்தாழ்வார்.

சவ்வல்லியில் அவதரித்தவர் - பேயாழ்வார்

முதலாழ்வார் மூவரும் அந்தணர்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்