பாடலில் இறைச்சி என்றால் என்ன?

இறைச்சிப் பொருள்

இறைச்சி என்னும் சொல் ‘இறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. ‘தங்குதல்’ என்னும் பொருள் உடையது. கவிஞர்கள், தாம் கூறும் சொற்களுக்கு அடைமொழியாகக் கூறப்படும் பிற சொற்கள் தமது ஆற்றலால் பிறிதொரு பொருளைக் குறிப்பால் புலப்படுத்தி நிற்கும். அத்தகைய சொல் திறனை - புரிந்து - அறிந்து - உணர்ந்து கொள்ளும் நுட்பம் இறைச்சி எனப்படுகிறது. 



புலவன் சொல்லுகின்ற உவமத்தோடு ஒத்துக் கூறக் கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம், புலவன் இயற்றிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுவது இறைச்சி. இறைச்சியால் வேறு பொருளையும் உணர்ந்துகொள்ளலாம்.

ஒன்றேன் அல்லென் ஒன்றுவென் குன்றத்து
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் கொய்மார்
நின்றுகொய மலரும் நாடனொடு
ஒன்றேன் தோழி ஒன்றினானே.
இந்தப் பாடலில் போரிட்டுக்கொள்ளும் இரண்டு யானைகள் மிதித்த வேங்கைமரம் இறைச்சிப் பொருளாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் வேங்கை மரத்தைத் தலைவி என்று கொண்டு காணவேண்டும். தலைவன் புணர்ச்சிக்காக அவளை மிதிக்கிறான். தாய் காப்புக்குள் வைத்து அவளை மிதிக்கிறாள். திருமணந்தான் இதற்குத் தீர்வு. முன்பு திருமணம் என்னும் வேங்கைப்பூவை மரத்தில் ஏறிப் பறிக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது இருவரும் மிதிப்பதால் அது நிலத்தில் நின்றுகொண்டே பறிக்கும் எளிய நிலைக்கு வந்துவிட்டது. தலைவன், தலைவி, தாய் மூவரும் திருமணத்தை நாடுகின்றனர். இந்த உள்ளக் கிடக்கை இதன் இறைச்சிப் பொருளால் கொள்ளக் கிடக்கின்றது.

இராமலிங்க அடிகளார் குறித்த வினா விடைகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்