2018-ம் ஆண்டுக்கான இயல் விருது


எழுத்தாளர் இமையம் 2018-ம் ஆண்டுக்கான `இயல்’ விருதைப் பெறுகிறார்.

கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக இயங்கிவரும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில், இயல் விருது வழங்கிவருகிறது.

2018-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இமையம் தற்போது விருத்தாசலத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சாதி ஆவணக் கொலையைப் பற்றி அவர் எழுதிய பெத்தவன் எனும் நெடுங்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு திருப்பதி பல்கலைக்கழக பாடத்திட்டதில் இடம்பெற்றுள்ளது.

பெரியார் விருது, அக்னி விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்

விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் (கனடா டோரன்டோ) 2019- ஜூனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கு விருது: அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருதை வழங்கி வருகின்றனர்.

2017-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்காக புனைவு வரிசையில் எழுத்தாளர் பா.வெங்கடேசனும் அபுனைவு வரிசையில் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம் ஆகிய நாவல்கள் முக்கியமானவையாகும். விருதுத் தொகை தலா ரூ.1 லட்சம் ஆகும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்