கைமாறு - கைம்மாறு | இரண்டில் எது சரி?

கைமாறு என்பதன் பொருள் என்ன?

“கைமாறு” என்றால் கை மாறுவது. ஒரு பொருள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறுவது. மணிவண்ணன் கடையை நல்லான் விலைக்கு வாங்கிவிட்டால், “கடை கைமாறிவிட்டது” என்று சொல்கிறோமல்லவா, அது.

“கைம்மாறு” என்றால் திரும்பச் செய்யப்படும் உதவி. ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறவாமல், நன்றியோடு திரும்பச் செய்யும் உதவி.

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு” என்ற (211) திருக்குறள் பாட்டில் வருவது. அங்கே மேலும் பொருள் விரிவது.

ஒரு பொருள் ஒருவரிடமிருந்து இன்னொருவர் கைக்கு மாறுவதைச் சொல்லும்போதோ, எழுதும்போதோ “கைம்மாறு” என்ற சொல்லைப் பயன்படுத்துவது தவறு. பொருள் கைம்மாறிவிட்டது என்பது பிழை.

“ஒருவருக்கு நாம் உதவி செய்யும்போது அவர் நமக்குத் திரும்பவும் உதவி செய்வார் என எதிர்பார்க்காமல் உதவவேண்டும்” என்பதைச் சொல்லும்போதோ எழுதும்போதோ “கைமாறு” என்னும் சொல்லைப் பயன்படுத்துவது தவறு.

கைமாறு = கைமாறுவது
கைம்மாறு = திரும்பச் செய்யும் உதவி

கருத்துரையிடுக

0 கருத்துகள்