சிற்பக்கலை

Sirpa Kalai

  • கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
  • "கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
    மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
    கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
    பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன"  என்று திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.
    மணிமேகலையிலும் இத்தகு குறிப்புகள் காணப்படுகின்றன.
  •  சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம்.
    1) முழு உருவச் சிற்பங்கள்
    2) புடைப்புச் சிற்பங்கள்
முழு உருவச் சிற்பங்கள் :
உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.

புடைப்புச் சிற்பங்கள்:
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம். இத்தகு சிற்பங்களை அரண்மனைகள், கோவில்கள் போன்ற இடங்களில் காணலாம்.

கோவிலின் தரைப் பகுதி, கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், சுவர்களின் வெளிப்புறங்கள் என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.

தெய்வ உருவங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், முழுவடிவ (பிரதிமை) உருவங்கள் என நான்கு நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன. 

கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்