தமிழ் இலக்கணம் - வல்லினம் மிகும் இடங்கள்

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
அ + பெயர் = அப்பெயர்
இ + வழி = இவ்வழி

2. அந்த, இந்த, எந்த என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.
அந்த + பையன் = அந்தப்பையன்
இந்த + பாம்பு = இந்தப்பாம்பு

3. அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் வல்லினம் மிகும்.
அங்கு + செல் = அங்குச்செல்

4. அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.
அப்படி + கேள் = அப்படிக் கேள்
இப்படி + சொல் = இப்படிச் சொல்

5. அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.
அதற்கு + தூவு = அதற்குத் தூவு

6. எட்டு, பத்து என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.
ஒன்று + கேள் = ஒன்று கேள், இரண்டு + சட்டை = இரண்டு சட்டை ... என்று வரும், ஆனால்
எட்டு + பாட்டு = எட்டுப்பாட்டு.
பத்து + தொகை = பத்துத்தொகை.

7. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் ஒற்று மிகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் வருமொழி பெயர்ச்சொல்லாக இருந்தாலும் ஒற்று மிகும் (உதாரணம்: பாக்குக் கடை)

8. இரண்டாம் வேற்றுமை விரி அல்லது இரண்டாம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில், வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: அவனைக் காப்பாற்று)

9. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும் (உதாரணம்: நீர்க்குடம். நீரை உடைய குடம் என்று விரியும்)
நீர் + குடம் = நீர்க்குடம்
தயிர் + பானை = தயிர்ப்பானை
தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த் தொட்டி

10. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும். (உதாரணம்: வெள்ளித் தட்டு - வெள்ளியினால் செய்யப்பட்ட தட்டு என்று விரியும்.)
இரும்பு + கம்பி = இரும்புக்கம்பி
மரம் + பெட்டி = மரப்பெட்டி

11. நான்காம் வேற்றுமை விரி (அல்ல்லது நான்காம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில்) வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: தந்தைக்குக் கடமை)

12. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: வேலிக் கம்பி - வேலிக்குக் கம்பி என்று விரியும்)
குடை + கம்பி = குடைக்கம்பி
சட்டை + துணி = சட்டைத்துணி

13. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் - நிலைமொழி அஃறிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: கூலிப்படை - கூலிக்குப் போர்புரியும் படை என்று விரியும்)

14. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் பெரும்பாலும் வல்லினம் மிகும். (உதாரணம்: புலமைச் சிறப்பு - புலமையது சிறப்பு என்று விரியும்)

15. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்ப்பாம்பு - நீர்க்கண் வாழும் பாம்பு என்று விரியும்.)

வல்லெழுத்து மிகா இடங்கள் 
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்