10th Science Study Material

TNPSC, TET, Police Exams | 
10th text book Science Study Notes


மரபும் பரிணாமமும் :

கிரிகர் ஜோகன் மெண்டல் (1822 -1884) இத்தகைய பாரம்பரிய கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டார். ஆஸ்திரிய நாட்டுத் துறவியான மெண்டல், தன் மடத்தில் உள்ள தோட்டத்தில் வளர்த்த, தோட்டப் பட்டாணி, இனிப்புப்பட்டாணிச் செடியில் (பைசம் சட்டைவம்) பல வேறுபாடுகளை உடைய பண்புகளைக் கண்டறிந்தார்.
பெற்றோர் தலைமுறைகளான (P1) தூய நெட்டை, தூய குட்டை பண்புகளுடன் கூடிய பெற்றோர்களைக் கலப்பின் மூலம் பெறப்பட்ட முதல் தலைமுறையில் (F1) இடைப்பட்ட உயர பண்புகளைத் தராமல், பெற்றோர் பண்புகளில் ஒன்றான நெட்டைப் பண்பினை மட்டுமே கொண்டிருந்தன. 

இதனைத் தற்கலப்புச் செய்து, இரண்டாம் தலைமுறை (F2) பெறப்பட்டதும், இதில் முதல் தலைமுறையில் வெளிப்படாத குட்டை பண்பு வெளிப்பட்டது. இத்தலைமுறையில் பெறப்பட்ட நெட்டை : குட்டை பண்புகள் 3:1 என்ற விகிதத்தில் இருந்தன. மேற்கூறிய ஆய்வில், ஒரே ஒரு பண்பான உயரம் என்பதனைக் கொண்டு ஆய்வு செய்ததினால் இதனை ஒரு பண்புக் கலப்பு எனப் பெயரிட்டார். 
பாரம்பரியத்தின் இயற்பியல் தன்மை :
பண்புக் காரணிகள், ஜீன்களினால் நிர்ணயிக்கப்படுகின்றன. 
ஜீன்களே பாரம்பரியத்தின் காரணிகளாகின்றன. 
ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு, அல்லீல்கள் என்றும், அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லீலோ மார்புகள் என்றும் அழைக்கப்படும். 


மெண்டல் அறிவியல், கணிதம் இரண்டையும் இணைத்து கணக்கிடுதலை வெளியிட்டு மரபுவழி கடத்தல் விதிகளை வெளியிட்டார். 

புறத்தோற்றத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பண்புகளான நெட்டை அல்லது குட்டை, ஊதா அல்லது வெள்ளை நிறம் போன்றவைப் புறத்தோற்றப் பண்பு (பீனோட்டைப்) எனப்படும். 
இப்பண்புகளுக்குக் காரணமான குரோமோசோம் அல்லது ஜீன் அமைப்பு ஜீனாக்கப்பண்பு (ஜீனோட்டைப்) எனப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்