இந்திய இராணுவத்தில் மத ஆசிரியர் பணி

இந்திய இராணுவத்தில் மத ஆசிரியர் பணிக்கான 121 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

1. பணியின் பெயர்: 
Religious Teacher (Junior Commissioned Officer) (PRT Course 88, 89 & 90)
காலியிடங்கள்: 121 
(Pandit - 118, Maulvi (Sunni) - 9, Padre - 4)

கல்வித்தகுதி:
Pandi: இந்து மத போதகர் பணிக்கேற்ற வகையில் சம்ஸ்கிருத மொழியில் ஆச்சார்யா பட்டம்  Karam Kand சமய பாடப்பிரிவில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை முடித்து சாஸ்திரி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Maulvi (Sunni): முஸ்லிம் மத குரு பணிக்குரிய Maulvi Alim in Arabic அல்லது adib alim in Urdu தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Padre: கிறிஸ்துவ மத போதகர் பணிக்கான உள்ளூர் பிஷப்பால் அங்கீகரிக்கப்பட்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

வயது: 
25-34 25 முதல் 34 வரை

குறைந்த பட்ச உடற்தகுதிகள்:
உயரம்: 160 செ.மீ இருக்க வேண்டும்
மார்பளவு: 77 செ.மீ
உடல் எடை: 50 கிலோ
உடல் திறன் தகுதிகள்: 8 நிமிடத்தில் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை ஒடி முடிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ராணுவத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வில் பொது அறிவு தொடர்பான கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கும், மத ஆசிரியர் பணிக்குரிய சம்மந்தப்பட்ட கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.
இதில் வெற்றிபெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு  அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 6 வார அடிப்படை ராணுவ பயிற்சியும், 11 வார மத ஆசிரியர் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும். பின்னர் நிரந்தர பணி வழங்கப்பட்டு ராணுவத்தில் Junior Commissioned Officer (Religious Teacher) பணி வழங்கப்படும்.


எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 23.2.2020

எழுத்துத்தேர்வு & நேர்முகத்தேர்வு தொடர்பான அட்மிட் கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2019

கருத்துரையிடுக

0 கருத்துகள்