சி.வை. தாமோதரனார் - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

'தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படும் சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.

தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்து, தம் இருபதாவது வயதிலேயே 'நீதிநெறி விளக்கம்' என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார்.

1868ஆம் ஆண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும் பின்னர்க் கலித்தொகை, இறையனார் அகப்பொருள், வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களையும் செம்மையாகப் பதிப்பித்துப் புகழ்கொண்டார். அத்துடன் நில்லாது, கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் சி.வை. தாமோதரனார் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். ஆறாம் வாசகப் புத்தகம் முதலிய (1832 - 1901) பள்ளிப்பாடநூல்களையும் எழுதினார்.

அவருடைய தமிழ்ப்பணியைக் கண்ட பெர்சிவல் பாதிரியார், அவரைத் தாம் நடத்திய 'தினவர்த்தமானி' என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார். அவ்வமயம் அவர் ஆங்கிலேயர் பலருக்கும் தமிழ் கற்றுத் தந்தார். அரசாங்கத்தாரால், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். 

பிறகு, பி.எல். தேர்விலும் தேர்ச்சி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதிக் கடமையாற்றினார்.
Current Affairs 2020 - Free online Test-01
Ayakudi TNPSC Model Question Paper Pdf Free Download  
Akash IAS Academy Study Material Pdf Free Download  
டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி?

கருத்துரையிடுக

0 கருத்துகள்