பக்தி இலக்கியம் - தேவாரப்பாடல்கள்


சைவ சமய பெரியவர்களான நாயன்மார்களும் வைணவ சமயப் பெரியவர்களான ஆழ்வார்களும் தோன்றிப் பக்தி பாடல்களைப் பாடி ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள்.

சைவ சமயத்தை வளர்த்தவர்கள் சமயக்குரவர் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் அடங்குவர்.


நாயன்மார்கள் :

அ) திருஞானசம்பந்தர்

அவதரித்த ஊர் சீர்காழி

கையில் கிண்ணமும் வாயில் பாலும் வடியவும் கண்ட தந்தை “யார் கொடுத்த பாலினை உண்டாய்” என அதட்டவே, ‘தோடுடைய செவியன்’ எனப்பாடி அம்மையப்பரைச் சுட்டிக் காட்டினார்.

திருத்தலங்கள்தோறும் இசையுடன் தமிழ்ப் பாடல்களைப் பாடி ‘நாளுமின்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’ எனப் போற்றப்பெரும் சிறப்பினை அடைந்தார்.

இவருடைய தேவாரப்பாடல்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.

ஆ) திருநாவுகரசர்

 திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளான் குடியில் தோன்றியவர்.

அவரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.

இவரும் ஞானசம்பந்தரும் ஒரே காலத்தவர்.

இவருடைய பாகள் 4,5,6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இவை முறையே திருநேரிசை,திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம்.

வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்த நாவுக்கரசர் ‘நாமார்க்கும் குடியலோம், நமனை அஞ்சோம்’ என அஞ்சா நெஞ்சினராய்த் திகழ்ந்து துன்பங்களை வென்றார்.

பல்லவ மன்னன் இவரை நீற்றறையில் இட்டபோது இவர் ‘மாசில் வீணையும் மாலைமதியமும்’ எனும் பாடல் இவர் திண்ணிய உள்ள உறுதியையும் ஈசன் கழலின் சிறப்பினையும் ஒருங்கே உணர்த்தும்.

திருத்தாண்டக வேந்தர் எனும் புதிய பா முறையைக் கையாண்டமையால் இவர் தாண்டக வேந்தர் எனும் பெயர் பெற்றார்.

மருள் நீக்கியார் என்னும் இயற்பெயருடைய இவரைச் சம்பந்தர் ‘அப்பரே’ என அழத்தார்.

இறைவானரோ இவருக்கு ‘நாவுகரசர்’ எனும் பெயரைச் சூட்டினார்.

இ) சுந்தரர்

இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவ அந்தணர் மரபில் அவதரித்தார்.

இறைவன் அருளால் பரவையார், சங்கிலியார் எனும் இருமாதரை மணந்து, தலங்கள்தோறும் சென்று, சைவை பயிர் தழைக்குமாறு செய்த பிறகு வெள்ளானை மீது ஏறி திரும்பவும் கயிலை சென்றடந்த வரலாற்றைப் பெரிய புராணம் விரிவாகக் கூறுகின்றது.
தலங்கள் தோறும் சென்று சிவப்பிரானது புகழைப் பாடிய இவருக்கு ‘வந்தொண்டர்’,’தம்பிரான் தோழர்’ எனும் பெயர் உண்டு. 
இவரின் தேவாராப் பாடல் 7ஆம் திருமுறையாக விளங்குகின்றன.

ஈ) மாணிக்கவாசகர்

பாண்டிய நாட்டில் திருவாதவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர்.

இயற்பெயர் வாதவூரர்.

வாதாவூரில் மணிபோன்ற வாசகங்களைக் கேட்ட இறைவன் ‘மாணிக்கவாசகர்’ என்ற பெயரை இவருக்குச் சூட்டினார்.
பன்னிரு திருமுறைகளையும் பார்க்க கேட்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்