144 தடை உத்தரவு என்றால் என்ன?

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத வகையில் தடுப்பதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தவறு. மீறி அங்கே நபர்கள் கூடி, பொதுமக்களின் அமைதியை பாதிப்படைய செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்.
யார் பிறப்பிக்கலாம்?

மாவட்ட ஆட்சியர் அல்லது மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் அவர்கள் நிர்வாகம் செய்யும் பகுதிக்குள்ளான இடங்களில் குறிப்பிட்ட நபருக்கு எதிராகவோ, குறிப்பிட்ட நகரத்திற்கு எதிராகவோ இந்த உத்தரவை பிறப்பிக்கலாம்.

மீறினால் என்ன தண்டனை?

இச்சட்டத்தின் பிரிவு 141 முதல் 149ன் படி 144 தடை உத்தரவை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது தண்டனைத்தொகை விதிக்கப்படும். 
ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன?
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-இன் விரிவாக்கம் அல்லது விரிவான நடவடிக்கையே ஊரடங்கு உத்தரவாகும்.

அசாதாரணமான சூழ்நிலைகளில் பதற்றத்தை தணிக்க முடியாத நிலை எழும்போது, மாநில அரசு அல்லது மத்திய அரசு ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதி அல்லது மாவட்டம் அல்லது மாநிலங்கள் அல்லது நாடு முழுவதும் என்ற அளவில் மக்களின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இனம் அல்லது சமுதாயம், ஜாதி கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, நோய் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான தேவையின்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

Current Affairs 2020 - Free online Test-01
Ayakudi TNPSC Model Question Paper Pdf Free Download  
Akash IAS Academy Study Material Pdf Free Download  
டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி?

கருத்துரையிடுக

0 கருத்துகள்