பாவை நூல்கள்

மார்கழி திங்கள் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களையும் எழுப்பிக்கொண்டு ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. 

இதனை பாவை நோன்பு என்பர் அவ்வாறு திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை. 

இதேபோல சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் திருவெம்பாவை இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் இறையரசன் இவருடைய இயற்பெயர் சே. சேசுராசா என்பதாகும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. வணக்கம் நண்பர்களே!கன்னிப் பாவை குறித்த தகவல்கள் தேவை. தெரிந்தால் 8220227704 என்ற எண்ணிற்கு தெரிவிக்கவும் . நன்றி

    பதிலளிநீக்கு