கற்றது தமிழ்! பெற்றது புகழ்!

  • தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்ற உ.வே.சா.வுக்கும் பண்டிதமணி கதிரேசனாருக்கும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பெரும் பேராசிரியர் (மகாமகோ உபாத்யாயா)பட்டம் வழங்கப்பட்டது.
  • தமிழறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார், கவிஞர் வைரமுத்து முதலான தமிழறிஞர்கள் இந்திய அரசு வழங்கும் பத்ம பூஷண் விருது பெற்றுள்ளனர்.
  • சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் பலர் தமிழில் முதுகலை / முனைவர் பட்டம் பெற்றவர்கள்.
  • பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC அமைப்பு) திரைத்துறையில் சத்யஜித்ரே, இசைத் துறையில் எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோருக்கு வழங்கிய தேசியப் பேராசிரியர் (National _ Professor) என்னும் தகுதியைத் தமிழ்த்துறையில் முனைவர் தமிழண்ண லுக்கு வழங்கியது.
  • அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியர்களாகப் பணியாற்றவும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன.
  • 1984 இல் இ.ஆ.ப. தேர்வை முழுமையாகத் தமிழில் எழுதி வெற்றி பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர் ஆர். பாலகிருஷ்ணன் இஆப. தற்போது (2018) ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச்செயலாளர் பதவியில் உள்ளார்.
  • பொறியியல் / வேளாண்மைப் பட்டதாரியாக இருந்து இ.ஆ.ப. தேர்வை முழுமையாகத் தமிழில் எழுதி வெற்றி பெற்ற இ.ஆ.ப. அதிகாரிகள் பலர் தற்போது தமிழகத்தில் பணியில் இருக்கிறார்கள்.
  • இ.ஆ.ப. தேர்வில் தமிழை விருப்பப் பாடமாக எடுத்து, பட்டதாரிகள் பலர் ஆண்டுதோறும் வெற்றிபெறுகின்றனர்.
  • திரைத்துறையில் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரும் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்ற ஒரே இந்தியத் திரைப்படப் பாடலாசிரியர் என்ற சிறப்பைப் பெற்ற தமிழ்க்கவிஞரும் தமிழ் இலக்கிய முதுகலைப் பட்டதாரிகளே.
  • தமிழ் மொழியில் சரளமான பேச்சுத் திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநர்களாகவும் புகழ் பெற முடியும். அதன் வழியே திரைத்துறையில் நுழைந்து வெற்றி பெற்றவர்கள் பலருளர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்