இரத்த செல்களின் வகைகள்

இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்


1. இரத்த சிவப்பு அணுக்கள் :

  • இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
  • இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
  • இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
  • ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்
  • பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்
  • ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
  • பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
  • இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
  • இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா


2. இரத்த வெள்ளை அணுக்கள் :

  • இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியு கோசைட்டுகள்
  • இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
  • இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
  • இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியு கோபினியா
  • இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
  • உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்


லியூகோசைட்டுகள் வகைகள் (இரத்த வெள்ளை அணுக்கள்) - 2,

1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்

துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் - 3

நியூட்ரோஃபில்கள்,
இயோசினாஃபில்கள்,
பேசோஃபில்கள்.

துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
லிம்போசைட்டுகள்,
மோனோசைட்டுகள்.

மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை,

இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு :-

  • நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
  • இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
  • பேசோஃபில்கள் - 0.1%
  • லிம்போசைட்டுகள் - (20 - 30%)
  • மோனோசைட்டுகள் - (1 - 4%)

3. இரத்த தட்டுகள் :

  • இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
  • இரத்த தட்டுகள் வாழ்நாள் : 5 - 9 நாட்கள்
  • இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
  • இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000
  • இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு.
Current Affairs 2020 - Free online Test-01
Ayakudi TNPSC Model Question Paper Pdf Free Download  
Akash IAS Academy Study Material Pdf Free Download  
டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி?

கருத்துரையிடுக

0 கருத்துகள்