ஆயுர்வேத மருத்துவத்தின் இதயம் : அஷ்டாங்க ஹ்ருதயம்

  • அஷ்டாங்க ஹ்ருதயம் என்பது ஓர் ஆயுர்வேத மருத்துவ நூலாகும். இது சஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இது பண்டைய இந்தியாவின் மூன்று முக்கிய ஆயுர்வேத நூல்களில் ஒன்றாகும்.
  • இந்நூலின் ஆசிரியர் வாக்படர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் 550-600 என்று கருதப்படுகிறது.

  • சரக சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை ஆகிய புத்தகங்களுக்குப் பிறகு, மிகவும் தெள்ளத்தெளிவாக எழுதப்பட்ட ஒரு நூல் இது.

  • ‘அஷ்டாங்க சங்கிரஹம்’ என்ற ஒரு பெரிய நூலின் சுருக்கம் இது. இதை எழுதித் தொகுத்தவர் லகு வாக்படர். இது முழுக்க முழுக்க நோய்க் குறியீடுகளையும், தத்துவங்களையும், நோய்க்கான சிகிச்சையையும் கூறுகிறது.

  • சரக சம்ஹிதை மருத்துவத்துக்கும், சுஸ்ருத சம்ஹிதை அறுவை சிகிச்சைக்கும் சிறந்த புத்தகங்களாகத் திகழ்கின்றன.

  • அஷ்டாங்க ஹ்ருதயம் இரண்டிலும் உள்ள சாரத்தை எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சைக்கும், மருத்துவச் சிகிச்சைக்கும் ஒரு நன்னூலாகத் திகழ்கிறது.

  • இந்தப் புத்தகத்தில் ஆறு பிரிவுகள் உள்ளன, 120 அத்தியாயங்கள் உள்ளன. ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களின் ஹ்ருதயம் போல இந்நூல் விளங்குகிறது.

  • 1935-ம் ஆண்டு பண்டிதர் துரைசாமி அய்யங்கார் வடமொழி சுலோகங்கள் இல்லாமல் தமிழ் மொழியில் அஷ்டாங்க ஹ்ருதயத்தை வெளியிட்டார். பின்னர் வடமொழியுடன் தமிழ் உரை சேர்த்துப் பெரிதாக வெளிவந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்