அடியார்க்கு நல்லார்

  • இலக்கிய உரையாசிரியர்.

  • சிலப்பதிகாரத்திற்கு சிறந்த உரை கண்டவர்.
  • அடியார்க்கு நல்லார்க்கு முன்னதாகவும் முன்மாதிரியாகவும் இருந்த உரை அரும்பதவுரை.
  • அடியார்க்கு நல்லார் உரையில் இளம்பூரணாரும் அரும்பதவுரையாசிரியரும் இடம்பெறுகின்றனர். இவ்விருவர்தம் காலமும் கி.பி.11 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்றபட்டது எனக் கருதப்படுகின்றது. மேலும், இவர் உரையில் கலிங்கத்துப் பரணி பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன.

  • கானல்வரி நீங்கலாக முதல் 19 காதைகளுக்கு இவர் உரை கிடைத்துள்ளது
  • மேற்கோள் பாடலின் நூற்பெயரைச் சுட்டுவது இவரது தனிச்சிறப்புகளுள் ஒன்று.
  • கலிங்கத்துப்பரணியை முதல் முதலாக மேற்கோள் காட்டிய உரையாசிரியர்.
  • முத்தமிழிலும் வல்ல ஒரே உரையாசிரியர்.
  • பொழிப்புரை, அருஞ்சொல் விளக்கம், மேற்கோள், இலக்கண விளக்கம் என இவர் உரை செல்கிறது.
  • பரதம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பஞ்சமரபு, பரதசேனாபதியம், மதிவாணன் நாடகத் தமிழ் போன்ற நாடக நூல்கள் இருந்தமையை இவர் உரையால்தான் அறிகிறோம்.

  • இவர் உரையை முதன்முதலாக பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
  • இவர் நிரம்பர் என்னும் ஊரினர் என்பதையும், இவருக்கு நிரம்பையர் காவலன் என்று மற்றொரு பெயரும் உண்டு

கருத்துரையிடுக

0 கருத்துகள்