கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்

 கடலை குறிக்கும் வேறு பெயர்கள்


ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி மரக்கலத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் 
 
கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பன. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான கலத்தைக் குறிக்கும். 
 
உப்பங்கழிகளில் செலுத்துதற்குரிய சிறிய படகுகளும் கடலில் செலுத்துதற்குரிய பெரிய நாவாய்களும் அன்று இருந்தன. 

கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும். 
 
புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன. அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.
 
பெரிய நாவாய்கள் காற்றின் துணைகொண்டே இயங்கின. அவை பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைப் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

கருத்துரையிடுக

1 கருத்துகள்