TNPSC Group 4 Exam New Syllabus 2022 | பொதுஅறிவு (General Studies)

 

TNPSC Group IV & VAO Exam REVISED & UPDATED Full Syllabus - Jan 27, 2022
பொதுத்தமிழ் (General Tamil) Syllabus
General Studies
பொதுஅறிவு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV
(தொகுதி-IV மற்றும் கிராம நிர்வாக அலுவலர்)

பொது அறிவு
(பத்தாம் வகுப்பு தரம்)
(கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள் )

1. பொது அறிவியல்
i. பேரண்டத்தின் இயல்பு - இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் - இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் - விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயந்திரவியல் , மின்னியல் , காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின்
அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.
ii. தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.
iii. உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
iv. சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.

2. நடப்பு நிகழ்வுகள்
i. அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு - தேசியச் சின்னங்கள் - மாநிலங்கள் குறித்த விவரங்கள் - செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் - விளையாட்டு - நூல்களும் ஆசிரியர்களும்.
ii. நலன் சார் அரசுத் திட்டங்கள் - தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்.
iii. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் - புவியியல் அடையாளங்கள் - தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள். 

3. புவியியல்
i. புவி அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப் பொழிவு, வானிலை மற்றும் காலநிலை - நீர் வளங்கள் - ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்.
ii. போக்குவரத்து - தகவல் தொடர்பு.
iii. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்.
iv. பேரிடர் - பேரிடர் மேலாண்மை - சுற்றுச்சூழல் - பருவநிலை
மாற்றம்.

4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
i. சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் - தென் இந்திய வரலாறு .
ii. இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்காறு.
ii. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. 

5. இந்திய ஆட்சியியல்
i. இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை - அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள். 
ii. குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
iii. ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் - உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
iv. கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள் : மத்திய - மாநில உறவுகள்.
v. தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி.
பொது வாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் - லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா - தகவல் அறியும் உரிமை - பெண்களுக்கு அதிகாரமளித்தல் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்.

6. இந்தியப் பொருளாதாரம்
i. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு மதிப்பீடு - திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.
ii. வருவாய் ஆதாரங்கள் - இந்திய ரிசர்வ் வங்கி - நிதி ஆணையம் - மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு - சரக்கு மற்றும் சேவை வரி.
iii. பொருளாதார போக்குகள் - வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி - ஊரக நலன்சார் திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை.

7. இந்திய தேசிய இயக்கம்
i. தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் - இந்திய தேசிய காங்கிரஸ் - தலைவர்கள் உருவாதல் - பி.ஆர். அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்.
ii. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள்.

8. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்
i. தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்.
ii. திருக்குறள் :
(அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
(ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை.
(இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
(ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம்,
மனிதநேயம் முதலானவை.
(உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.
(ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.
iii. விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு
எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.
iv. தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள். 

9. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
i. சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள். 
ii. தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள். 
iii. தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.

10. திறனறிவும் மனக்கணக்கு நுண்ண றிவும் (APTITUDE & MENTAL ABILITY) 
i. சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெரு பொதுக் காரணி - மீச்சிறு பொது மடங்கு
ii. விகிதம் மற்றும் விகிதாச்சாரம்.
iii. தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை.
iv. தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் - எண் வரிசை.
 
Click & download General Studies New Syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்