Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

தமிழ் இலக்கிய வரலாறு | ஐங்குறுநூறு

சங்க இலக்கியம் - எட்டுத்தொகை
ஐங்குறுநூறு

  • ஐந்து+குறுமை+நூறு = ஐங்குறுநூறு.
  • எட்டுத் தொகையுள் மூன்றாவதாக வைத்துக் கூறப்படும் நூல்.
  • அகத்திணை நூல்.
  • மூன்றடி முதல் ஆறடிவரை பாடப்பட்ட நூல்.
  • ஐநூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
  • திணைக்கு நூறு பாடல்கள்
  • ஒவ்வொரு திணையும் பத்துப்பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு பத்தும் பாடலின் பொருள் அல்லது பயின்றுவரும் சொல்லால் பெயர் பெறுகிறது
பாடிய புலவர்கள் ஐந்துபேர்
  1. மருதம் - ஓரம் போகியார்
  2. நெய்தல் -  அம்மூவனார்
  3. குறிஞ்சி - கபிலர்
  4. பாலை - ஓதலாந்தையார்
  5. முல்லை - பேயனார்
  • தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.
  • தொகுப்பித்தவர் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துச் சிவனைப் பற்றியது.
  • இந்நூலை முதன் முதலாகப் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
  • சங்க இலக்கியத்துள் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்
இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி