Featured post
மூளையின் பாகங்கள் மற்றும் அதன் பணிகள்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
SCIENCE & TECHNOLOGY GROUP 2 MAINS
மனிதன் விலங்கினத்தைச் சார்ந்த ஒரு முதுகெலும்பி மற்றும் பாலூட்டியாவான்.
மற்ற முதுகெலும்பிகளில் உள்ளதைப் போலவே மனித மூளை மூன்று பாகங்களாகப் பிhpக்கப்பட்டுள்ளன.
முன் மூளை
நடுமூளை
பின் மூளை
முன் மூளை
பெருமூளை, தலாமஸ் மற்றும் ஹைப்போ தலாமஸ் ஆகிய அமைப்புகளை முன் மூளை கொண்டுள்ளது.
பெருமூளை
மூளையின் பெரும்பகுதியாக பெருமூளை அமைந்துள்ளது. மூளையின் மூன்றில் இரண்டு பங்கு பெருமூளை உள்ளது.
ஆழமான நடுப்பிளவு பெருமூளையை நெடுக்குவாட்டத்தில் வலது, இடது என இரு பகுதியாகப் பிhpக்கின்றது.
இந்தப் பெருமூளை அரைக்கோளங்கள் அடிப்பகுதியில் கார்பஸ் கலோஸம் என்னும் நரம்புச் திசுப் பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.
பெருமூளையின் வெளிப்புறப்பகுதிக்குச் சாம்பல் பொருள் அல்லது பெருமூளைப் புறணி என்று பெயர். உட்பகுதிக்கு வெண்மைப்பொருள் என்று பெயர்.
பெருமூளையின் புறணி
பெருமூளை நரம்புச்செல் உடலங்களைக் கொண்ட பலஅடுக்குச் சாம்பல் நிற நரம்புச் செல்களால் ஆனது.
மனிதனின் பெருமூளை புறணியின் அதிகப்படியான புறப்பரப்பு மடிப்புகளுற்றுப் பல சுருக்கங்களைக் கொண்டு காணப்படும். இந்தச் சுருக்கங்கள் மேடு பள்ளங்களைக் (சல்சி-மூளை பள்ளம், கைரின்- மூளை மேடு) கொண்டுள்ளன.
பெருமூளையின் புறணயில் அமைந்துள்ளவை.
1. இயக்கப் பகுதிகள்.
2. உணர்வுப் பகுதிகள்.
3. இணைப்புப் பகுதிகள் (உணர்வு, இயக்கப் பகுதி அல்லாதவை).
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக