நுகர்வோர் உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005
(Consumer Rights and the Right to Information Act)

ஒரு பொருளை முழுமையாகப் பயன்படுத்துபவர் - நுகர்வோர்.
நாம் எப்பொழுது நுகர்வோராக ஆகிறோம் -
1. பொருளை விலை கொடுத்து வாங்கும் போது.
2. பொருளை உபயோகிக்கும் போது.
பொது நிறுவனங்கள் - காப்பீடு, போக்குவரத்து, மின்சாரம், நிதி, வங்கி.
நமது தேவைகள் மற்றும் சேவைகள் எதன் மூலம் கவரப்படுகிறது விளம்பரம்.
நுகர்வோரால் கருதப்படும் பொதுவான குறைகள் - காலாவதியான மருந்து மாத்திரைகள் விற்பனை செய்வது.
நுகர்வோரின் உரிமைகள் இந்திய சட்டத்தில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் 12.10.2005
1. ஒளிவு மறைவற்ற, நேர்மையான, நம்பகத்தன்மையான செயல்பாடுகளில் பொது நிறுவனங்கள் செயல்படுதல்.
2. பொது நிறுவனங்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு வாய்ப்பு.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிந்துகொள்ளும் விவரங்கள்:
மத்திய, மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சி அமைப்புகள் போன்றவற்றுள் அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்பட்ட பிற அமைப்புகள்:
எழுத்து மூலமாகவோ அல்லது ஆவணங்களைப் பெறுகின்ற உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.
மக்களின் அடிப்படை உரிமையென பாராளுமன்றத்தால் சட்டமாக நிறைவேற்றப்பட்டது - த. அ. உ சட்டம்.
நுகர்வோரின் தேவைகளை பாதுகாக்கும் பொருட்டு அரசு மூன்று வழிமுறைகளை வகுத்துள்ளது.
1. சட்டம் சார்ந்த நடவடிக்கைகள் (நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்துதல்)
2. நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகள் (அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்)
3. தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள் (பொருட்களின் தரம் பாதுகாகப்படுதல்)
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் -1986
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டியவை :
1. வெள்ளைத் தாளில் தனது புகார் எழுதி தாக்கல் செய்யவேண்டும்.
2. பொருள் சம்மந்தமான ரசீதுகள்.
3. உத்திரவாதம்,
4. பாதுகாப்பு நகல்கள் (2,3, 4 இணைப்பு)
நுகர்வோர் வேறு எந்த வழக்கறிஞர் உதவியை நாடவேண்டிய அவசியமில்லை
நுகர்வோர் தாமே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்காடலாம்.
நுகர்வோர் சட்டத்தின் முக்கிய அம்சம்:
மூன்று அடுக்குகளாக உள்ளது ( நீதிமன்றங்கள் )
தொழில் சார்ந்த நுகர்வோர் பொருட்களின் மீது பொறிக்கப்படும் முத்திரை-BIS
விவசாயம் சார்ந்த நுகர்வோர் பொருட்களின் மீது பொறிக்கப்படும் முத்திரை - அக்மார்க்.
ISO-1947 - ஜெனிவா - துவக்கம் - அரசு சாரா நிறுவனம்.
உலக அளவில் பொருட்களின் தரத்தை அறிய செயல்படும் அமைப்பு - ISO
உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட உலகத் தரத்தினை அறிந்துகொள்ள - கோடக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் - CODEX ALIMENTATION COMMISSION
CAC - 1963 - ரோம் - நிறுவப்பட்டது.
சுவாமி விவேகானந்தர்
அலிகார் இயக்கம் | சர் சையது அகமதுகான்
இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்
இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்
TNPSC General Tamil Mock Test Free Download
0 கருத்துகள்