Featured post
10th Tamil சிலப்பதிகாரம் - மருவூர்ப் பாக்கம்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிலப்பதிகாரம் – பாடல் வரிகள்மருவூர்ப் பாக்கம்
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந் துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்,
மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்
இந்திரவிழா ஊரெடுத்த காதை ( அடி 13-39)
8th Tamil Text Book கலைச்சொற்கள்
9th Tamil Text Book கலைச்சொற்கள்
10th Tamil Text Book கலைச்சொற்கள்
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
- இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது;
- மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
- இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது;
- கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது.
மேலும் படிக்க... பதிவிறக்கம் செய்ய...
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக