9th Tamil இராவண காவியம் | Ravana Kaviyam

9ஆம் வகுப்பு தமிழ்ப்பாடபுத்தகத்தில் இராவண காவியத்தில்
தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் 



நெய்தல் 

பசிபட ஒருவன் வாடப்
        பார்த்துஇனி இருக்கும் கீழ்மை
முசிபட ஒழுகும் தூய
        முறையினை அறிவார் போல
வசிபட முதுநீர் புக்கு
        மலையெனத் துவரை நன்னீர்
கசிபட ஒளிமுத் தோடு
        கரையினில் குவிப்பார் அம்மா   (82)

வருமலை அளவிக் கானல்
        மணலிடை உலவிக் காற்றில் 
சுரிகுழல் உலர்த்தும் தும்பி
        தொடர்மரை முகத்தர் தோற்றம்
இருபெரு விசும்பிற் செல்லும்
        இளமைதீர் மதியம் தன்னைக்
கருமுகில் தொடர்ந்து செல்லுங்
        காட்சி போல்தோன்று மாதோ.   (84)
சொல்லும் பொருளும்: 
தும்பி- ஒருவகை வண்டு; 
துவரை-பவளம்; 
மரை- தாமரை மலர்; 
விசும்பு- வானம்;
மதியம்-நிலவு.

இலக்கணக் குறிப்பு
பைங்கிளி - பண்புத்தொகை; 
பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும்- எண்ணும்மைகள். 
இன்னிளங்குருளை - பண்புத்தொகை; 
அதிர்குரல் - வினைத்தொகை; 
மன்னிய - பெயரெச்சம்; 
வெரீஇ - சொல்லிசை அளபெடை; 
கடிகமழ் - உரிச்சொற்றொடர்; 
மலர்க்கண்ணி - மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்கதொகை;
எருத்துக்கோடு - ஆறாம் வேற்றுமைத்தொகை; 
கரைபொரு - இரண்டாம் வேற்றுமைத் தொகை; 
மரைமுகம் - உவமைத்தொகை; 
கருமுகில் - பண்புத்தொகை; 
வருமலை - வினைத்தொகை;

பகுபத உறுப்பிலக்கணம்

பருகிய = பருகு+இன்+ ய்+அ;
பருகு - பகுதி;
இன்- இறந்தகால இடைநிலை (ன் கெட்டது விகாரம்);
ய் -உடம்படுமெய்; 
அ -பெயரெச்ச விகுதி 

பூக்கும் = பூ + க் + க் + உம்; 
பூ - பகுதி; 
க் – சந்தி
க் - எதிர்கால இடைநிலை; 
உம் - வினைமுற்று விகுதி

தெரிந்து தெளிவோம்
கோர்வை / கோவை 
கோ என்பது வேர்ச்சொல். கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி. (எ.கா.) ஆசாரக்கோவை,
ஊசியில் நூலைக் கோத்தான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்