ARISTOTLE ON HAPPINESS

ARISTOTLE ON HAPPINESS 

Aristotle believed that happiness was the most important thing in life. He taught that one should not waste one’s time in the pursuits of pleasure, but should seek happiness instead. According to him, true happiness lay not in material things, but in understanding one’s true nature, and regaling one’s full potential. In short, happiness depends upon ourselves, and not on the outside world. One of Aristotle’s most famous quotes is

“...happiness is the meaning and the purpose of life, the whole aim and end of human existence...”

மகிழ்ச்சி பற்றிய அரிஸ்டாட்டிலின் கருத்து

மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சம் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்தாகும். ஒரு மனிதன் தற்காலிக இன்பத்தை தேடுவதில் நேரத்தை செலவிடுவதைக் காட்டிலும், நிரந்தரமான மகிழ்ச்சியை தேடுவதே சிறந்தது என்பது அரிஸ்டாட்டிலின் கருத்தாகும்.

ஒருவனின் மகிழ்ச்சி என்பது பொருள் அடிப்படையிலானவற்றில் இல்லை என்பதும் அவனுடைய முழுமையான திறமை மற்றும் உண்மையான தன்மையை அறிந்துகொள்வதில்தான் இருக்கிறது என்பதும் அரிஸ்டாட்டிலின் கருத்தாகும். சுருங்கக் கூறின் மகிழ்ச்சி என்பது ஒருவனின் உள்ளேயே இருக்கிறதே தவிர வெளியில் இல்லை என்பது அவரின் கருத்து.

அரிஸ்டாட்டிலின் புகழ்பெற்ற கருத்தாக்கம் ஒன்று பின்வருமாறு "மனிதனின் உயிர்வாழ்தலின் நோக்கம் மற்றும் பொருளே மகிழ்ச்சியை தேடுவதேயாகும்"



கருத்துரையிடுக

0 கருத்துகள்