பாரம்பரியம்:
- தலைமுறை தலைமுறையாக நிகழும் பண்புகள் கடத்துதலைப் பாரம்பரியம் எனலாம்.
- மரபு பொருளான டி.என்.ஏ (DNA) மூலம் தாய், தந்தை இருவரின் இருவரின் பண்புகளும் குழந்தைகளுக்குக் கடத்தப்படுகின்றன.
- பாரம்பரிய கடத்துததலை முதன் முதலாக வெளியிட்டவர் கிரிகோர் ஜோகன் மெண்டல் (1822 - 1884)
- மெண்டல் ஆராய்ச்சி செய்த தாவரம் பட்டாணிச் செடி (பைசம் சட்டைவம்).
- பட்டாணிச் செடியின் ஒரு பண்புக் கலப்பு எனும் பண்பைக் கண்டறிந்தவர் மெண்டல் பண்புக் கலப்பில் நெட்டை : குட்டை பண்புகள் 3 : 1 என்ற விகிதத்தில் இருந்தன.
- புறத்தோற்றத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பண்புகளான நெட்டை அல்லது குட்டை, ஊதா அல்லது வெள்ளை நிறம் போன்றவைப் புறத்தோற்றப் பண்பு (பீனோட்டைப்) எனப்படும்.
- புறத்தோற்றப் பண்புகளுக்குக் காரணமான குரோமோசோம் அல்லது ஜீன் அமைப்பு ஜீனாக்கப்பண்பு (ஜீனோடைப்) எனப்படுகிறது.
- பாரம்பரியத்தின் பண்புகளுக்கு ஜீன்களே காரணிகளாகின்றன.
- ஒரே பண்பில் இரு வேறுபாடுகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர்
- அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லலோ மார்புகள் என்று பெயர்.
- எ.கா : நெட்டை மற்றும் குட்டை தாவரங்கள்.
வெள்ளை அல்லது ஊதா நிற மலர்.
மாறுபாடுகள் :
- உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று மாறுபடுகின்றன. இம்மாறுபாடுகளின் வகைகள்
1. உடற்செல் மாறுபாடுகள் :
- உடற்செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை.
2. இனச்செல்மாறுபாடுகள் :
இனச்செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. இவ்வகைகளே புதிய புதிய சிற்றினம் உருவாகவும், பரிணாமத்திற்கும், காரணியாகிறது.
சார்லஸ் டார்வின் (1809 - 1882) :
சார்லஸ் டார்வின் (1809 - 1882) :
- இயற்கை தேர்வு எனும் கருத்துக் கோளை உருவாக்கினார்.
இயற்கைத் தேர்வு கொள்கை:
- உயிரினங்களின் வாழ்வியலுக்கான போராட்டமும், இதில் வெற்றி பெறுபவையே நிலை நிறுத்தப்படும்.
ஜீன் பாப்தீஸ் லாமார்க் :
- உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியைக் கூறியவர்
லாமார்க் விதி :
- தொடர்ந்து அதிகப் பயன்பாட்டில் இருக்கும் உறுப்புகள் நன்கு வளர்ச்சியுறும்.
- எ.கா: ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டதற்குக் காரணம், தேவையும் எண்ணமும் மட்டுமே.
பரிணாமம்:
- பரிணாமம் என்பது எளியத் தன்மைக் கொண்ட உயிரினங்களாக, படிப்படியாக ஏற்படும் மாற்றங்களாகும்.
சிற்றினமாதல்:
- மனித இனம் ஹோமா செபியன்ஸ் எனும் சிற்றினமாக உள்ளது.
மனிதனின் பரிணாமம்:
- 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனித உடலமைப்பைக் கொண்டிருந்த குரங்கினங்கள் கொரில்லா, சிம்பன்சி.
- 3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனித முன்னோடிகள் ஹோமினிட்டுகள்.
- மனித இயல்பை ஒத்திருந்த ஹோமினிட்டுகள் ஹோமா ஹெபிலிஸ்
- 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாமிச உண்ணி மனிதர்கள் ஹோமா எரக்ட்டஸ்.
- ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் நியான்டர்தால்.
- 75,000 - 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர்கள் தற்கால ஹோமோசெபியன்கள்
மரபுப் பொறியியல்:
- மரபுப் பொறியில் என்பது, உயிரியின் குரோமோசோம்களில் டி.என்.ஏ (DNA) வில் செயற்கையாக மாற்றம் செய்வதாகும். இதன் மூலம் உயிரியின் புற அமைப்பில் மாற்றத்தைத் தோற்றுவிக்க இயலும்.
19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி விவேகானந்தர்
அலிகார் இயக்கம் | சர் சையது அகமதுகான்
இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்
இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்
TNPSC General Tamil Mock Test Free Download
0 கருத்துகள்