வாணிதாசன்

கவிஞர்                  :    வாணிதாசன்

இயற்பெயர்        :    அரங்கசாமி (எ) எத்திராசாலு்

பெற்றோர்           :    திருக்காமு – துளசியம்மாள்

காலம்                    :    22.07.1915 – 07-08-1974

பட்டப்பெயர்      :    கவிஞரேறு, பாவலர் மணி

சிறப்பு பெயர்    :    வேர்ட்ஸ் வொர்த்

புனைப்பெயர்   :    ரமி


ஆசிரியர் குறிப்பு

வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தவர்

இவரின் பெற்றோர் திருக்காமு – துளசியம்மாள்

இவரின் இயற்பெயர் அரங்கசாமி (எ) எத்திராசாலு்

இவர் பாரதிதாசன் பரம்பரை என்றழைக்கப்படும் பாவலர் தலைமையில் வருபவர்.

இவரது காலம் 22.07.1915 – 07-08-1974

இவர் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர்.

‘ரமி’ என்ற புனைப்பெயரும் கொண்டவர்.

கவிஞரேறு, பாவலர் மணி எனும் பட்டங்களை பெற்றுள்ளார்

‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என புகழப்படுகிறார்.

மயிலை சிவமுத்து இவரை ‘தமிழ்நாட்டுத் தாகூர்’ என்று வருணித்துள்ளார்

பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்துக் காட்டுவதில் வாணிதாசனின் கவிதைகள் சிறந்து விளங்குகின்றன.

உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு ‘செவாலியர்’ விருதினை வழங்கியுள்ளார்.

இயற்கை புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம்.

07.08.1974-ல் இயற்கை எய்தினார்

வாணிதாசன் எழுதிய நூல்கள்

எழிலோவியம் (கவிதை)                 எழில் விருத்தம்

குழந்தை இலக்கியம் (கவிதை) இன்ப இலக்கியம்

தொடுவானம் (கவிதை)                 கொடி முல்லை (சிறு காப்பியம்)

தீர்த்த யாத்திரை                                 தமிழச்சி (சிறு காப்பியம்)

பொங்கற்பரிசு                                 சிரித்த நுணா

விட்டர் விகோவின் ஆன்ழெல்லா

Click & Download Pdf

முடியரசன்வாணிதாசன்சுரதாகண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,

கருத்துரையிடுக

0 கருத்துகள்