உலக தடகள போட்டியில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார்

ஜூனியர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் ஹீமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றார்.


20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி, பின்லாந்தின் தாம்ப்ரே நகரில் நடைபெறுகிறது. இதில் மகளிர் பிரிவுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில், அஸ்ஸாமைச் சேர்ந்த ஹீமா 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து முதல் இடத்தை பிடித்தார். 18 வயதே ஆன ஹிமா தாஸ் கடந்த காமன்வெல்த் போட்டியில் 6ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமது ஓட்டத்தின் வேகத்தை மேலும் அதிகரிக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அவரின் விடா முயற்சியின் காரணமாக படிப்படியாக  வளர்ச்சி பெற்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். அதன் முதல் வெற்றியாக உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்துள்ளார்.

No comments:

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.