TNPSC Group Exam-ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி ?

முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள். சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள். டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது. பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும். இவைகளிலிருந்து நூறு வினாக்கள் கேட்கப்படுகிறது.

பொதுத் தமிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.

இந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இந்த வருடம் TNPSC குரூப் II தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II தேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - II தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 40 வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.


இந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,

பொதுத் தமிழில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,

எங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.

அந்த பயிற்சி மையத்தில் சேருங்கள். வெற்றி பெறுங்கள். நிறையப் பயிற்சி மையங்களில் முறையாகவும் முழுமையாகவும் கற்று தருவதில்லை. ஆனால் போலியாக நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து இவ்வளவு பேர் வெற்றிப் பெற்றார்கள் என ஆதாரமில்லாத விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சில பயிற்சி நிறுவனங்கள் சென்ற வருடத்தில் குரூப் II -வில் 30 பேர் வெற்றிப் பெற்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள் எனில் உண்மையில் அந்த வருடத்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் 300 பேர். ஆக 10% சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெறவைக்கும் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் எப்படி ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக இருக்க முடியும். ஒரு சிறந்த பயிற்சி நிறுவனம் என்பது 70% சதவிகித மாணவர்களையாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும். அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்.  
நன்றி  :  Muniraj Salem

  படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?

  TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்

  படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?

  Ayakudi Current Affairs

   No comments:

   Post a Comment

   Previous Page Next Page Home
   Related Posts Plugin for WordPress, Blogger...

   இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

   You can also receive Free Email Updates:

   Copyright

   Protected by Copyscape Website Copyright Protection