அரசுப்பள்ளியில் படித்து படிப்படியாக உயர்ந்து சாதனை !

அரசுப்பள்ளியில் படித்து படிப்படியாக உயர்ந்து சாதனை : சப் - கலெக்டரான கவுசல்யா
திருப்பூர், பொம்மநாயக்கன் பாளையம் அரசு பள்ளி மாணவி கவுசல்யா, விடாமுயற்சியால், 'குரூப் - 1' தேர்வில் வெற்றி பெற்று, 'சப்- கலெக்டர்' ஆனார் திருப்பூரைச் சேர்ந்தவர் கவுசல்யா, 24. பொம்மநாயக்கன் பாளையம், அரசு துவக்கப் பள்ளியில் படித்த இவர், போயம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 வகுப்பும் முடித்தார்.எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், பி.எஸ்.சி., விலங்கியல் பட்டம் பெற்ற இவர், 2013ல் நடந்த, 'குரூப்- 4' தேர்வில் வெற்றி பெற்று, தான் படித்த பொம்மநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே, இளநிலை உதவியாளராக, சேர்ந்தார். 


அடுத்தடுத்து அரசு தேர்வு எழுதிய அவர், கடந்தாண்டு நடந்த, 'குருப்- 2' தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவை மாவட்ட, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலராக, பணியில் சேர்ந்தார். ஜனவரி முதல், திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலராக பணிபுரிந்தார். இதற்கிடையில், 2017ல், இவர் எழுதிய, 'குரூப் - 1' தேர்வு முடிவு வெளியாகி, பிப்., 19ல், சென்னையில் கவுன்சிலிங் நடந்தது. இதில் தேர்வான கவுசல்யா, சப் - கலெக்டராக, பணி நியமன ஆணை பெற்றார். 

கவுசல்யா கூறுகையில், ''அரசு தேர்வுகளின் மீது கொண்ட ஆர்வம், ஈடுபாடு காரணமாகவே, இந்த வெற்றி சாத்தியமானது. பணியாணை பெற்ற தருணத்தை வாழ்வில் மறக்க முடியாது. சப் - கலெக்டர் பயிற்சிக்கு செல்ல ஆர்வத்துடன் உள்ளேன்,'' என்றார்.
படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்
படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
Ayakudi Current Affairs
புதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள் 
அரசுப்பள்ளியில் படித்து படிப்படியாக உயர்ந்து சாதனை 

கருத்துரையிடுக

0 கருத்துகள்