அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்

தேசிய கவி, சிந்துக்குத் தந்தை,
விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி
ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்
பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,
இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ்,
பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்
சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர்
- அண்ணாமலை ரெட்டியார் (அண்ணாமலை செட்டியார் அல்ல)
காந்தியக் கவிஞர் - நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - வேங்கட ராஜூலு ரெட்டியார்
உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்
சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்
சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வன் - அனுமன்

தமிழ் தென்றல் - திரு.வி.க.
வள்ளலார் - ராமலிங்க அடிகளார்
கிருத்துவக் கம்பன் - எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
தனது கல்லறையில் தன்னை ஒரு
தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.
ஆசு கவி - காளமேகப் புலவர்.
எழுத்துக்கு - இளம்பூரணார்.
சொல்லுக்கு - சேனாவரையார்.
உரையாசிரியர் - இளம்பூரணார்.
உச்சிமேல்கொள் புலவர் - நச்சினார்க்கினியர்
தமிழ் வியாசர் - நாதமுனிகள் (அ) நம்பியாண்டார் நம்பி
புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்

ஏழிசை மன்னர் - தியாகராச பாகவதர்
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவணர்
கவிக்கோ - அப்துல் ரஹ்மான்
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்,
தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி
தமிழ் முனி, குருமுனி, குறுமுனி,
பொதிகை முனி - அகத்தியர்
தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை
நனி சொட்ட சொட்ட பாடிய கவி,
உத்தம சோழ பல்லவராயன்,
இராமதேவர், அருண்மொழித் தேவர் - சேக்கிழார்
இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்-புதுமைப்பித்தன்
தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்
தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில்
புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி
தமிழ் தாத்தா - உ.வே.சா
தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
தமிழ் நாடக தலைமையாசிரியர்
நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ் சுவாமிகள்
உவமைக் கவிஞர் - சுரதா

தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்
தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்
தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.
குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,
தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,
பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன்.
கவி யோகி - சுத்தானந்த பாரதி.
தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.
ஆசிய ஜோதி - புத்தர், நேரு
ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி
மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்
திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்
தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
தென்னாட்டு தாகூர் - வேங்கடரமணி
பண்டித மணி - கதிரேசன் செட்டியார்
சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்
வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி
பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்
தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன்
(சித்திரப்பாவை)
தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
கவிராட்சசன் - ஒட்டக்கூத்தர்
திவ்ய கவி, அழகிய மணவாளதாசர் ,தெய்வக் கவி- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.
தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமாமலை.
மண் தோய்ந்த புகழினான் - கோவலன்
வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்
பொய்யாக்குலக்கொடி நதி - வைகை
கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்
நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளைபதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection